எல்லாம் ஒன்றின் பின் ஒன்றே ...!


கடலின் சந்தோசம்
அலையில் ஆடும்
காற்றைவிட
நதியில் நீந்தும்
தாகத்திற்கு மட்டுமே .....!

மரத்தின் சந்தோசம்
பூத்து காய்க்கும்
கிளைகளைவிட
தியாகமாய் உதிரும்
இலைகளுக்கு மட்டுமே ...!

வானின் சந்தோசம்
அழகிய வண்ணமாய்
மழைகளில் உதிர்ந்து
மறையும் சிதறல்களில்
பிறக்கும் நட்சத்திரத்திற்கு
மட்டுமே ....!

ஆனால்
காதலின் சந்தோசம்
நினைத்து பின் வெறுத்து
மீண்டும் வேறொரு
காதலில் இணைவதில்
மட்டுமே ....!No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - ஆடி 2017

பொது சுவர்  இரண்டாகப் பிரிகிறது  பங்காளிகளின் உறவு  ஊது பத்தி தொழில்  புகைய தொடங்கியது  ...