கல்லறை காவியமாய் ...!


சொல்லாத வார்த்தைகளை
சொல்லி சொல்லி பார்ப்பதால்
அள்ளி அள்ளி ஆனந்தம் ....

எண்ணம் தாண்டி வண்ண
வண்ணமாய் கண்ணில் பூத்து
காதில் பேசுகிறது ஊமை
காதலாய் ....

மண்ணில் பூக்கும் செடியாய்
மலரும் பாசம் ஒரு நாள்
சொல்லாமலே உதிர்கிறது

அவன் இன்னொரு சொந்தமாய்
மண்ணில் மறையும்போது
கல்லறை காவியமாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு