வாழ்வது எதற்காக ...!!!


ஓட்டையான உலகத்தில்
உயரமான் வானத்தில்
ஒளிவிடும் சூரியனில்
தளிர்விடும் மனிதனாய்
தலைமுறை தாண்டும்
மக்கள் ....

ஒருமுறை
உண்ணும் உணவிற்காக
வரைமுறை தாண்டி
வாழும் வாழ்க்கைக்கு
பலமுறை செத்தும்
தலைமுறை சொத்திற்காக

மண்ணை அழித்து
பொன்னை தேடும்
கண்ணின் மன்னர்கள்
மீண்டும் மண்ணில்
விதையாவது ஏனோ ?

பொன்னான இந்தியாவில்
கண்ணாக வாழும் தலைவர்களை
எண்ணி எண்ணி திருந்தாமல்
வாழ்வதற்காகவா...?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 41

என் கொலுசொலியில் கேட்கிறது உன்  உயிரின் சங்கமம்