தாயின் பரிசு ...!


எதையும் கொடுக்காமல் 
எடுக்காமல் 
உயிராய் துடிக்கும் அன்பு 
நட்பு...!

அதையே கொடுத்து 
எடுத்துவிட்டால் 
காதல் ...!

ஆனால் 
கொஞ்சும் வயதில்
நஞ்சையும் நாவடக்கி 
கொஞ்சும் மழலைக்காக 
ஈரைந்து மாதம் சுமந்த 
தாயை 

நீ கொஞ்சும் குழந்தையைக்  
கண்டபின் 
வஞ்சம் கொண்ட மனைவியின் 
வார்த்தை கேட்டு 
காப்பகம் சேர்த்த மகனே 

நீ மறந்தாலும் அவள் 
மறக்கவில்லை அவள் பெயரில் 
எழுதிய சொத்தை உன் பெயரில் 
மாற்றி எழுத 
ஆனால் நீ மாறவில்லையே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு