முதிர்வு கன்னி...!

வார்த்தை குழந்தையானாலும் 
வாழ்க்கை முடியவில்லையே !

நிலமங்கையின் நிழலில் நீந்தும் 
வயது மங்கையைக் கண்ட வாலிபர்கள் 

திருமண ஆசையை தூண்டி 
வெறுமன வார்த்தை தந்து 

பெருமன சிக்கலில்
சிக்கவைப்பது ஏனோ?

கடைவீதியில் கிடைக்கும் 
வடை காப்பிக்கு ஒரு மணி நேர

உறவாடலில் உன் 
முழுவரிச் சோகத்தை 

சொல்லி என் அருமொழி 
வார்த்தை ஊமையாக்கியதால் 

மறுமொழி கூறாமல் 
இருவிழி கடலில் 

என் இமைகள் நீந்தியதால் 
உப்பாய் மாறிய அலைகள் 

தப்பாய் பாய்ந்ததால் 
செப்பாய் போய்விடேன் 

என் சிறுவயதை தாண்டி ...
விதியே நீ வேல்வியாய் மாறியதால் 

தோல்வியாய் வாழ்கிறேன் 
இன்றும் முதிர்வு கன்னியாய்...! 

4 comments:

 1. இவர்களுக்குள்ள மன உளைச்சல் யாருக்கும் இருக்காது... நினைக்கும் போதே வேதனையாய் இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் இந்த மன உளைச்சல் இன்னும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது என்ன செய்வது நன்றிகள் அண்ணா

   Delete
 2. நல்ல கவிதை தோழி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பு வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா!

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு