நடிகை(கள்) - கவிதை

























அம்மாவசை முகம் 
பௌர்ணமியாய் ஜொலித்தது 
முகப்பூச்சில் நடிகையானேன்...

கிழிந்த உடையில் 
கிறுக்கும் கோலங்கள் 
திரை விமர்சனத்தில் 
தின்று கழித்தது மாடுகள்

விதவிதமானப் பாடல்களில்   
விளையாடும் தேனாக
எல்லா அதிசியங்களையும் 
என்னுள் அடக்கிவிட்டேன் 

யாதும் ஊரில் என்னை
யாவரும்  காண்பீர் -உங்களைப்போல் 
யதார்த்தமாய் வாழமுடியாமல் 
ஏங்குகிறேன் ஒவ்வொரு நாளில் 

தூங்கும் போதும் நடிக்கிறேன் 
துயிலுருகிய ராவணர்களின் 
மனைவியாக மனதை அடகுவைத்து 
மலரும் கனவுக் கன்னியாய் 

ஆசைக்கு அதிகமாய் பணம் 
அளவுக்கு மீறிய தருணம் 
கிடைத்தது போதும் என்று 
கேள்வியில்லா கீதையாகிறேன் 

எல்லா வேசமும் கண்விட்டேன் 
எதுவும் நிலைக்கவில்லை 
உழைத்து களைத்த போது 
நிஜத்தில் வாழ ஆசைபடுகிறேன் 
நானும் பெண் தானே







No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145