( நடிகைகள் )முற்றுப் புள்ளி வைக்கிறேன்.




















ஹல்லோ நிஷா வரும் ஞயிறு அன்று ஆஸ்கர் விருது விழாவிற்கு நீயும் வரைய என்றாள் சோபனா அதற்கு நிஷாவும் சரி என்றாள் இருவரும் விழாவிற்கு சென்றார்கள். அங்கு சிறந்த கதைக்கான விருதை அறிவித்தார்கள் அப்படத்தின் தயாரிப்பாளர் வந்து பெற்றுகொண்டார் அப்போது சில வார்த்தைகள் பேசும் படி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கூறினார்கள் அவரும் பேச ஆரம்பித்தார் ....
இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம் இருந்தும் நான் முக்கியமாக சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான் நான் இந்த கதையை ஒரு புத்தகத்தில் படித்தேன் கரு மிகவும் அழகாகவும் புதுமையாகவும் இருந்தது உடனே அந்த கதை ஆசிரியரைத் தேடிச் சென்றேன் 
பார்த்தாள் அவர் ஒரு ஏழை எழுத்தாளர் சின்ன வயது எனக்கு ஒரு ஷாக் அவளோ என்னை பார்த்து ஷாக் ஆனார் உடனே நான் கூறினேன் உங்கள் கதையை நான் திரைப்படமாக எடுக்க விரும்புகிறேன் தாங்கள் இதற்கு என்ன விலை நிர்ணயம் செய்கிறேர்கள் என்றேன் அவர் இக்கதைக்காக வெறும் பத்து லட்சம் மட்டுமே கேட்டார் அவர் கேட்டதை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது இருந்தும் எனக்கு லாபம் என்று வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். 
திரும்ப திரும்ப அக்கதை படித்தேன் பின்பு தான் புரிந்தது அந்த கதையின் ஆழம். இக்கதைக்கு நிச்சையம் ஆஸ்கர் விருது கிடைக்குமென்றேன். அதேபோல் கிடைத்தது அதற்கு தமிழ் ரசிகர்கள் ரசிகைகள் மற்றும் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் வணக்கம் என்றார் தயாரிப்பாளர் ....
அங்கு விழாவை வழி நடத்தும் இருவரு சார் கடைசிவரை அந்த கதை ஆசிரியர் யார் என்று சொல்லவில்லையே என்றார்....
அதற்கு தயாரிப்பாளர் எல்லாவற்றையும் நானே சொன்னால் நல்ல இருக்காது இன் நிகழ்ச்சியின் இறுதிக்குள் உங்களுக்கே தெரியும் என்றார்.... 
அடுத்த விருது சிறந்த நடிகைக்கான விருதுக்கு அழைப்பு வந்தது ....
அதே பாடத்தில் நடித்த சோபனாவுக்கு தான் அந்த விருது 
சோபனா மேடைக்கு வந்தாள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம் என்னை தேர்வு செய்த குழுவிற்கும் மற்றும் என் முதல் படத்தை ரசித்து என்னை விருதுக்கு தேர்வு செய்த ரசிகை ரசிகர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 
நான் முதலில் என் தயாரிப்பாளரை இங்கே அழைக்க அனுமதி தாருங்கள் நான் ஒரு நடிகையாக வர முதல் காரணம் அவர் தான். என் கதையை படித்து பார்த்து அக்கதைக்கு பொருத்தமான நாயகியாக நான் தான் என்றும் என்னால் மட்டுமே சிறப்பாக நடிக்க முடியும் என்று நினைத்தவர் அவர்.
காரணம் நான் எழுதியது கதையல்ல அதில் முழுக்க முழுக்க நானே வாழ்ந்ததை சார் தான் முதலி தெரிந்துகொண்டார்.இந்த புரிதலுக்கு அந்த பத்து லட்சம் தான். எனக்கு வேண்டிய தொகை அவ்வளவு தான் அதற்கு மேல் வேண்டாம் என்று நானே முடிவு செய்தேன் காரணம் கடவுள் கொடுத்தப் பரிசு இது என்று உணர்ந்தேன். 
பின் அவரும் என்னை வற்புறுத்தவில்லை இன்றுடன் இந்த படத்திற்கு சொந்தக்கறான் அவர் தான் என்றார்.அப்படியே ஆகட்டும் சார் என்று கையெப்பம் போட்டேன் படம் வெற்றிகரமாக முடிந்தது அவர் கூறியபடி விருதும் கிடைத்தது.இன்று உங்கள் முன் புதுமுக நாயகிகளில் நானும் ஒருவர் என்று நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது வாய்ப்புக்கு மிக்க நன்றிகள் என்று விடைபெற்றாள் சோபனா 
தயாரிப்பாளர் நில்லுங்கள் இவர் கூரியது உண்மை தான் இருந்தும் எனக்கு இந்த படத்தால் அதிக லாபம் கிடைத்தது இவரின் உண்மையான மனதை புரிந்து கொண்டு லாபத்தில் கொஞ்சம் கொடுக்க முயன்றேன் அதற்கு இவர் கூறியது எனக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது சார் இது போதும் 
நான் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேனோ அப்படி வாழ கடவுளும் ஆசி வழங்கிவிட்டார் நீங்கள் எனக்கு கொடுக்க நினைக்கும் பங்கை என்னுடன் பணியாற்றிய அனைவருக்கு பங்கு போட்டு கொடுத்துவிடுங்கள் என்றார். இப்படி பட்ட மனது யாருக் வரும் சொல்லுங்கள் 
இப்போது கூட இதை இங்கே சொல்லிக்கொல்ல விரும்பவில்லை இருந்தும் நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா நடிகையாகிவிட்டாள் பணம் சம்பாதிக்கும் பொருட்டே நடிக்க விரும்புகிறார்கள், ஏன் நான் கூட முதலில் இவரை ஏமாற்றினேன் பின் இவர் தூய உள்ளம் கண்டு நானே திருந்திவிட்டேன் இதே போல் மற்றவரும் திருந்த வேண்டும் என்ற ஆசையால் கூறவில்லை உண்மை என்றும் வெளிப்பட வேண்டும் என்பதற்க்காகவே தான் சொல்கிறேன். 
ஒரு கதையாளியாகவும், நடிகையாகவும் இருந்தும் எனக்கு என்னுடன் பணி புரிந்த அனைவர்க்கும் மதிப்பு மரியாதையும் கொடுத்தும் நல்ல நட்புடன் பழகி வந்தவர் மற்றவர் கஷ்டத்தை புரிந்து கொள்ளும் மனம் யாருக்கும் வராது. 
இந்த சின்ன வயதில் எவளவு பெரிய ஆசை தெரியுமா அநாதை இல்லம்,முதியோர் இல்லம், வாழ்க்கையில் தள்ளப் பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது இப்படியே என்னிடம் அடிக்கடி கூறுவார் அவர் ஆசை போல் மேலும் வளர வாழ்த்துகிறேன் இவர் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி.அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்கு மன்னியுங்கள்.
சோபனா கடைசியாக கூறியது மாற்றங்கள் எல்லாம் ஓர் நாள் மாறும் மாறும் வரை நாமும் மாறாமல் இருப்போம் என்பதே ஏன் குறிக்கோள் இன்று நான் மாறிவிட்டேன் நீங்களும் மாறுவீர்கள் உங்கள் கஷ்டங்களில் இருந்து.
சார் சொன்னது போல் என் கதைப் பயணம் தொடரும் நடிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

காரணம் என் அடுத்த கதையில் தொடரும். நன்றி...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145