எல்லாம் புதியது...!எத்தனையோ அழகுமுகம் 
கண்டாலும் அன்பே உன்முகம் 
காணும்போது.... 
என்றுமே எனக்கு புதுமுகம்தான்!

அறிமுகம் உள்ள உறவுகளைவிட 
அறிமுகமில்லா உன்னுறவை
காணும்போது....
என்றுமே எனக்கு புது உறவுதான்!

தாய் தந்தை பாசம் எல்லாம் 
தலைமுறை பாசம் - அன்பே.... 
தன்னலமில்லா உன் பாசம் 
என் தலைமுறைக்கு புதுசுதான்! 

எத்தனை புதுசுகள் கண்டாலும் 
உன் கடைக்கண் பார்வை 
பட்டாலே ....
என் இமைக்கண் முதல் 
இதயம் வரை சிலிர்க்கும் 
சுகமே புதுசுதான்...!4 comments:

 1. அருமை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete
 2. மிக்க நன்றிகள் அண்ணா

  ReplyDelete
 3. "எத்தனை புதுசுகள் கண்டாலும்
  உன் கடைக்கண் பார்வை
  பட்டாலே ....
  என் இமைக்கண் முதல்
  இதயம் வரை சிலிர்க்கும்
  சுகமே புதுசுதான்...!"
  புதிய சுகம் இந்த வரிகளை படித்த போது ....

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...