சென்ரியு - 3திருக்குறள் - ஹைக்கூ 

எப்பால் மொழியிலும் 
முப்பால் சுரக்கும் 
நம் தாய் பால்
வேதங்களுக்கும் நல் 
போதங்கள் புகட்டும் 
தெய்வநூல் 

சாஸ்திரங்களை கூட 
சோஸ்திரமாய் மாற்றும் 
அச்சையப்  பாத்திரம் 

கடலில் சிலையாகி 
தமிழில் முதலாகி
சரித்திர அழகன் 

அகிலத்தையே 
ஈரடியால் நடந்த 
தமிழ் தாத்தா 

கவிஞர்கள் பிறக்க 
தமிழை வளர்க்க 
தாயாய் மருவிய தந்தை 

இளையவர்களுக்கு பாடம் 
முதியவர்களுக்கு வேதம் 
இதயக் குறள்

2 comments:

  1. Supper Its good to improve our self

    ReplyDelete
  2. thanking you so much brother

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு