கானா பாட்டு...!

சென்னைக்கெல்லாம் வந்தவுங்க 
வென்றுவிட்டாங்க அந்த நினப்புலதான் 
நானுமிங்க வெல்ல வந்தேங்க 

காலுமேல காலுபோட்டு வாழ்ந்துவந்தேங்க 
வெறும் காசுக்காக மானத்தையே 
இங்கு  அடகு வச்சேங்க 

பொன்னு வைரம் பூட்டிவிட்டு அழகு பாத்தாங்க 
இங்கு பொறந்த நாளே மறந்துபோக 
மாறிவிட்டேங்க

வகைவகையா துணிவாங்கி போட்டுபாத்தேங்க  
இங்கே போட்ட துணிய துவைக்க வழியில்லாம 
செண்டு போட்டேங்க 

பாசம் கூட வேசமாக மாறக் கண்டேங்க 
பாவி மனுசங்களையே படிப்பதற்கு 
பத்து வருஷம் கடந்துவிட்டேங்க 

பெத்தவுங்க பாசத்தையே மறந்து விட்டேங்க 
பேர் பெற்றெடுத்த நல் 
கல்வியையே உதறிவிட்டேங்க     

கலர்க் கலராய் கான்வெண்டேயே 
கடந்துவிட்டேன் கடல் வற்றுமளவு 
கண்ணீரிலே நனைந்துவிட்டேங்க 

பாத்துரும் கூட இங்கே பலபலக்குதுங்க 
வெறும் பௌடர் போட்ட 
மூஞ்சியெல்லாம் ஜோலி ஜொலிக்குதுங்க 

முதுமையெல்லாம் இளமையாக 
மாறி விட்டாங்க ஆனால் 
இதயத்தையே இரும்பாக காட்டி விட்டாங்க 

முடிஞ்சதெல்லாம் நன்மைக்கேன்னு 
வாழ்ந்து விட்டேங்க இன்னும் 
முயன்றவரை போட்டி போட்டு
எழுந்துவிட்டேங்க

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145