செம்மொழியான தமிழ் மொழி எங்கும் |
செழித்து வளரும் முதல் மொழி |
அகரம் படைத்த அடைமொழி -எங்கள் |
அகிலம் போற்றும் ஒரே மொழி - அது எங்கள் தாய்மொழி |
ஓவியனின் மொழியை உதிரத்தில் படைத்தான் |
காவியனின் மொழியை கற்பனையில் வளர்த்தான் |
வியர்வையின் மொழியை பசியில் மறைத்தான் |
விதியின் மொழியை எதனில் வைத்தானோ ! |
அறிவின் மொழியை ஞானத்தில் புதைத்தான் |
அன்பின் மொழியை இறக்கத்தில் அணைத்தான் |
உறவின் மொழியை ஜாதியில் திணித்தான் |
உள்ளத்தின் மொழியை எதனில் வைத்தானோ ! |
பிறப்பின் மொழியை அழுகையில் இணைத்தான் |
பிரிவின் மொழியை நொடியில் மறைத்தான் |
கனவின் மொழியை விடியலில் முடித்தான் |
கடலின் மொழியை எதனில் வைத்தானோ ! |
ஒழுக்கத்தின் மொழியை கல்வியில் விதைத்தான் |
அறத்தின் மொழியை ஆழியில் மடித்தான் |
இயற்கையின் மொழியை பசுமையில் ரசித்தான் |
ஏழ்மையின் மொழியை எதனில் வைத்தானோ |
தேவனின் மொழியை மௌனத்தில் உரைத்தான் |
தேகத்தின் மொழியை காதலில் இசைத்தான் |
யாக த்தின் மொழியை நீதியில் எரித்தான் |
யார் மொழியின் இறப்பை எதனில் வைத்தானோ ! |
எங்கள் தாய்மொழி !
Labels:
தமிழ் மொழிக் கவிதை

மறக்கவும் மாட்டோம் !
ராணுவம் எங்கள் ராணுவம் இன்று
ரணமாகிப் போனதே
யார் மனம் இதில் யார் மனம் இன்று
கனவாகிப் போனதே
கிராமத்தில் பூத்த மலரெல்லாம்
காஷ்மீரில் மணக்கிறதே என்று
மார் தட்டிய தந்தை முகம்
மரணத்தில் தவிக்கின்றதே
பூவும் பொட்டும் பொன் தாலி
சிரிப்புடன் பொழுதைக்கழிக்கும்
மனைவியின் கூந்தலில் இன்று
மல்லிகை சுடுகின்றதே
ஆசை மகன் நேச மகனின்
ஆடையை அணைத்துக்கொண்டு
அழுது புலம்பும் அன்னையின்
கண்ணீரில் நிதியுதவி நனைகின்றதே
அண்ணே மரணம் தான்
ஆயுசும் குறைவு தான்
ஆனாலும் அனுப்பிவைத்தோம்
வீணாப்போன தாக்குதலால் இன்று
வீர மரணம் அடைந்தாயே !
அண்ணே மரணம் தான்
ஆயுசும் குறைவு தான்
ஆனாலும் அனுப்பிவைத்தோம்
வீர மரணம் அடைந்தாயே !
“ ''மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.'' புல்வாமா தாக்குதலில் இறந்த எங்கள் வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
Labels:
இரங்கல் கவிதை

அப்பா - பாடல் !
மரணித்தவர் என் தந்தை இன்று |
மலர் விழி சுடுகின்றது |
கைகளுக்கு ஊனமில்லை அவர் |
கால்களுக்கும் ஊனமில்லை இறைவா |
இதயத்தை மட்டும் ஊனமாக்கிவிட்டு என்னை |
இறுதிவரை அழுக விட்டாயோ ! |
காக்கைக்கும் மரணமுண்டு அதன் |
கண்ணீரை ஏன் மறைத்தாய் - இறைவா |
பூக்களுக்கும் மனமுண்டு அதைப் |
புதைப்பதை ஏன் மறைத்தாய் - இறைவா |
ஈக்களுக்கும் வாழ்க்கையுண்டு அதை |
ஈன்றவரை ஏன் மறைத்தாய் - இறைவா |
பசுவுக்கும் மடியுண்டு அதன் |
பால் பருகுவதை ஏன் மறைத்தாய் - இறைவா |
நாய்களுக்கும் நன்றியுண்டு அதன் |
எதனுடன் எதை மறைத்தாலும் |
என்னுயிர் துடிக்கின்றது இறைவா |
சொல் இம்மரணம் விதியா இல்லை |
நான் செய்த பிழையா |
அங்கே பிழையென்று நானறிந்தால் இறந்திருப்பேன் |
இல்லை விதியென |
ஏதுவெனத் தெரியாமல் இறக்கின்றேன் |
எதிலும் என் தந்தையை நினைக்கின்றேன் |
Labels:
இரங்கல் கவிதை

Subscribe to:
Posts (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
குழந்தை ஏசு பிறந்துவிட்டார் வாருங்கள் குதித்து குதித்து மகிழ்ந்து பாடி ஆடுங்கள் தொழுவத்திலே பிறந்தவரே பாருங்...