செம்மொழியான தமிழ் மொழி எங்கும் |
செழித்து வளரும் முதல் மொழி |
அகரம் படைத்த அடைமொழி -எங்கள் |
அகிலம் போற்றும் ஒரே மொழி - அது எங்கள் தாய்மொழி |
ஓவியனின் மொழியை உதிரத்தில் படைத்தான் |
காவியனின் மொழியை கற்பனையில் வளர்த்தான் |
வியர்வையின் மொழியை பசியில் மறைத்தான் |
விதியின் மொழியை எதனில் வைத்தானோ ! |
அறிவின் மொழியை ஞானத்தில் புதைத்தான் |
அன்பின் மொழியை இறக்கத்தில் அணைத்தான் |
உறவின் மொழியை ஜாதியில் திணித்தான் |
உள்ளத்தின் மொழியை எதனில் வைத்தானோ ! |
பிறப்பின் மொழியை அழுகையில் இணைத்தான் |
பிரிவின் மொழியை நொடியில் மறைத்தான் |
கனவின் மொழியை விடியலில் முடித்தான் |
கடலின் மொழியை எதனில் வைத்தானோ ! |
ஒழுக்கத்தின் மொழியை கல்வியில் விதைத்தான் |
அறத்தின் மொழியை ஆழியில் மடித்தான் |
இயற்கையின் மொழியை பசுமையில் ரசித்தான் |
ஏழ்மையின் மொழியை எதனில் வைத்தானோ |
தேவனின் மொழியை மௌனத்தில் உரைத்தான் |
தேகத்தின் மொழியை காதலில் இசைத்தான் |
யாக த்தின் மொழியை நீதியில் எரித்தான் |
யார் மொழியின் இறப்பை எதனில் வைத்தானோ ! |
எங்கள் தாய்மொழி !
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...