ராணுவம் எங்கள் ராணுவம் இன்று
ரணமாகிப் போனதே
யார் மனம் இதில் யார் மனம் இன்று
கனவாகிப் போனதே
கிராமத்தில் பூத்த மலரெல்லாம்
காஷ்மீரில் மணக்கிறதே என்று
மார் தட்டிய தந்தை முகம்
மரணத்தில் தவிக்கின்றதே
பூவும் பொட்டும் பொன் தாலி
சிரிப்புடன் பொழுதைக்கழிக்கும்
மனைவியின் கூந்தலில் இன்று
மல்லிகை சுடுகின்றதே
ஆசை மகன் நேச மகனின்
ஆடையை அணைத்துக்கொண்டு
அழுது புலம்பும் அன்னையின்
கண்ணீரில் நிதியுதவி நனைகின்றதே
அண்ணே மரணம் தான்
ஆயுசும் குறைவு தான்
ஆனாலும் அனுப்பிவைத்தோம்
வீணாப்போன தாக்குதலால் இன்று
வீர மரணம் அடைந்தாயே !
அண்ணே மரணம் தான்
ஆயுசும் குறைவு தான்
ஆனாலும் அனுப்பிவைத்தோம்
வீர மரணம் அடைந்தாயே !
“ ''மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.'' புல்வாமா தாக்குதலில் இறந்த எங்கள் வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...