பச்சை பசேர் புல்வெளியில் படுத்துறங்கும் நெல் மணிகள் |
பறந்து விரிந்த வானில் பக்குவமாய் இரை தேடும் பறவைகள் |
ஓட்டு மொத்த விடியலையும் தன்வசமாக்கிக்கொண்ட கிழக்கு |
தடம் புரளாமல் கடகடவென ஓடும் ரயில் வண்டி |
காற்றோடு பேசும் கல் நொங்கு |
அறக்கப் பறக்க ஆவி பொங்கும் பனிமூட்டம் |
பதட்டத்துடனே கால்வைக்கும் தவளைகள் |
குருவியும் கிளியும் கொஞ்சி பேசும் காதல் லீலை |
அடி வேர் வரை அசைக்க துடிக்கும் மூங்கிலசத்தம் |
நாணத்தில் தலை குனியும் சூரியகாந்தி |
மனமே மருந்தாகப் பூக்கும் மலர் கொத்து |
மன்னிக்க முடியாத பட்டாம்பூச்சியின் பசி |
கோரைபுல் நுனியில் குடும்பம் நடத்தும் நீர்க்குமிழி |
நினைவை மட்டுமே பரிசாக கேட்கும் ஈரநிலா |
நட்சத்திரங்களை தேடும் மண் குதிரையின் அழுகை |
பால் சுரந்த மடுவில் தமிழ் பேசும் கன்றுக்குட்டி |
நீந்த மனமில்லாமல் ஏங்கி தவிக்கும் சலவைக்கல் |
வெயில் வரைந்த நிழல் ஓவியம் |
அங்கங்கே முட்டையிடும் வான்கோழி |
ஆக ஓகோ வென ஆடமறந்த காவல் பொம்மை |
பாண்டி விளையாடும் பள்ளி மான்கள் |
படிக்காத தாய் தந்தையின் ஆதார கையெப்பம் |
ஒடிந்த கிளையில் ஊஞ்சல் ஆடும் குருவிக்கு கூடு |
வளர்த்த மண்ணிற்கு வாழ்த்து சொல்லும் செந்தூரப்பூ |
அள்ளி முடிந்த கூந்தலில் துள்ளி திரியும் பட்டன் ரோஜா |
உதட்டிற்கு சாயம் பூசும் நாவல்பழம் |
அய்யனார் துணையிருக்க மொட்டவிழ்க்கும் தாமரை |
கால் சட்டையில் நிரம்பி வழியும் புளியம் பழம் |
ஆனா ஊனா கற்றுக் கொடுத்த கூழாங்கற்கள் |
அலையா விருந்தாளியாக படுக்கையில் காத்திருக்கும் மூட்டை பூச்சி |
ஏசி காற்றில் ஊசி குத்தும் மலைச்சாரல் |
தோலாடையே மேலாடையாக துயிலுரிக்கும் மண் கலப்பை |
இயற்கை கனிகளுடன் இளைப்பாறும் அணிகள் |
அத்தனையும் இழந்து பட்டணத்தில் பட்டன் தட்டிக்கொண்டிருக்கிறது |
நம் புதிய தலைமுறை ! |
நம் புதிய தலைமுறை !
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...