| மொட்டை வெயில் | |||||
| பட்டிக்காட்டில் | |||||
| அண்ணார்ந்து பார்த்த | |||||
| வானவூர்தியில் இன்று நான் | |||||
| அரைக்கால் டவுசர் | |||||
| முழுக்கால் பேண்ட் | |||||
| வெட்டி பந்தா | |||||
| எல்லாம் சேர்த்து | |||||
| முழுக்குப்போட்டது என் | |||||
| பள்ளிப் படிப்பை | |||||
| அரைகுறை படிப்போடு | |||||
| அயல் நாட்டைத் | |||||
| தேடிச் சென்றேன் | |||||
| முதலில் பவுசாகத்தான் இருந்தது | |||||
| பின்பு தான் புரிந்தது | |||||
| நம் சொந்தங்கள் எல்லாம் | |||||
| இந்த ஆண்ட்ராய்டு | |||||
| போனுக்குள் அடங்கியது தான் | |||||
| சொகுசு என நினைத்து | |||||
| வாழத் தொடங்கினேன் | |||||
| முதலில் இனித்தது | |||||
| பிறகு போகப்போக | |||||
| கசந்தது | |||||
| அழுதேன் | |||||
| அணைத்துக்கொள்ள | |||||
| அன்னை இல்லை | |||||
| புலம்பினே | |||||
| புத்தி சொல்ல | |||||
| தங்கை இல்லை | |||||
| சரி எல்லாம் விதி என்றேன் | |||||
| விட்டுக்கொடுக்க | |||||
| நண்பன் இல்லை | |||||
| விரட்டியடித்த தந்தையை எண்ணினேன் | |||||
| ஐயோ படித்திருந்தால் | |||||
| பட்டிக்காட்டிலே | |||||
| சொர்க்கம் போல் வாழ்ந்திருக்கலாமே | |||||
| என்ற எண்ணம் வந்துவந்து போக | |||||
| வயது முப்பதை தாண்டியது | |||||
| காதல் சோகம் | |||||
| கண்ணை கிழிக்க | |||||
| வயது சோகம் | |||||
| பெண்னைக் கழிக்க | |||||
| வாழ்ந்தும் வாழமலும் | |||||
வாழ்கின்றேன்
| |||||
வாழாவெட்டனாக !
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...