| கிளையை முறித்தபின் |
| பூக்கத் தொடங்கியது |
| செம்பருத்திப்பூ ! |
| தேநீர் இலை பறித்துப் போட |
| அட்டைப்பூச்சியாய் உறிஞ்சுகிறது |
| சாரமற்ற வாழ்வு ! |
| ஆயிரம் காலத்துப் பயிர் |
| அறுவடைக்காகக் காத்திருக்கிறது |
| கோர்ட் வாசலில் ! |
| கோவில் வாசலில் நின்று |
| வணங்காமல் இருக்கும் |
| காலணிகள் ! |
| கோவில் சுவற்றில் |
| அசுத்தம் செய்யும் |
| தெரு நாய்கள் ! |
| கொட்டித் தீர்க்கும் மழை |
| வயலில் இறங்கி |
| கப்பல்விடுகிறான் பேரன் ! |
| மாமியார் மருமகள் சண்டை |
| பதவி உயர்வு பெறுகிறார் |
| வீட்டு வேலைக்காரி ! |
| வளைந்து நெளிந்த புருவம் |
| நேராகச் செல்கிறது |
| பார்வைகள் ! |
முத்துக்கமலம் இணைய இதழில் எனது ஹைக்கூக்கள் - ஜூலை 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
வாழ்த்துகள்.....
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete