மே 2017 தமிழ் வாசல் மாத இதழில் எனது ஹைக்கூ

நிலா சோறு 
பசியோடு திரும்புகிறது 
நட்சத்திரங்கள்
கிளையை முறித்தபின்
பூக்க தொடங்கியது
செம்பருத்தி பூ
மாமியார் மருமகள் சண்டை 
பதவி உயர்வு பெறுகிறார் 
வீட்டு வேலைக்காரி

கவிச்சூரியன் மே 2017 - எனது ஹைக்கூ !

கண்ணாம் பூச்சி ஆட்டம் 
காட்டிக்கொடுக்க மறுக்கிறது 
சுத்தியல் சத்தம் !
 
விடியலைக் கண்டதும் 
முகம் கழுவுகிறது 
கிழக்கு சூரியன்
 
அழிக்க மனமில்லை 
ஆளாக்குகிறது 
ரப்பர் மரம்
 
வீட்டின் மேல் கூரையில் 
ஊஞ்சலாடுகிறது நிழல் கொடுத்த
மரத்தின் ஞாபகம்
மலடி வைத்தாள் 
குலை தள்ளியது
வாழை மரம் !

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - வைகாசி - 2017

வாலிபக் காதலுக்கு 
வண்ணம் தீட்டிச் செல்கிறது 
நிழல் ஓவியம்
பஞ்சத்தில் அடிபட்ட காகம் 
குளித்துக்கொண்டிருக்கிறது 
குழாய் அடியில்
கரை ஒதுங்கிய பரிசல் 
மூழ்கியது மாணவனின் 
எதிர்க்கலாம் !
அளவு குறைந்தாலும் 
ஆசையை தூண்டுகிறது 
ஒரு குவளை தேநீர்
கனவு கலந்த தூக்கம் 
ஆறுதல் தந்தது 
காலை தேநீர்

கோடை வெயில் 
குளிர்ச்சியாகவே இருக்கிறது 
கோயில் சிலைகள் 

கொலுசு மின்னிதழ் மே 2017 எனது ஹைக்கூ

மோதிர விரல் 
மெல்லக் கடிக்கிறது 
வரதட்சணை கணக்கு ...!
குடையை விரித்ததும் 
நிழலை மறைக்கிறது 
சூரியன் ...!
பூட்டிய கோவில் 
மனம் திறந்து பேசினான் 
பாதிக்கப்பட்ட பக்தன் ...!
உதிர்ந்த இறகு 
பறந்து செல்கிறது 
ஒரு குழந்தையின் மனம் ...!

தாழ்வு மனப்பான்மை ...!

Image result for தாழ்வு மனப்பான்மை

உனக்கும் எனக்கும்
இடையே இருப்பது
சிறு வைராக்கியம் தான்
என்றாலும்
பெருசாகப் பேசப்படுகிறது
நமக்குள் இருக்கும்
தாழ்வு மனப்பான்மை

கடைசி பெஞ்சி ...!கடைசி பெஞ்சின் 
மூச்சுக் காற்றை 
உறிஞ்சிக்கொண்டிருக்கிறது 
முதல் பெஞ்சில் பூத்திருக்கும் 
மலரைக் கண்டு

வாழ்க்கை !

Image result for antha ezhu naatkal

தொலைத்து விட்ட 
மனதை தேடுவதற்குள்
மணம் மாறி அமர்ந்துவிட்டது
வாழ்க்கை !

நீ தானோ ?

Image may contain: 1 person, standing and outdoor

சீர்
தளை
அடி
தொடை 
என்னும் கட்டுப்பாட்டுக்குள் 
அடங்கிய புதுக்கவிதை 
நீ தானோ ?

நம்பிக்கை பாத்திரம்

Image result for நம்பிக்கை பாத்திரம்

குட்டி துரோகம் தான் 
என்றாலும் ...
பெரிதாக சுடுகிறது 
நம்பிக்கை பாத்திரம்

இந்த தும்மல்!

Image result for keerthi suresh
நானும் நீயும் 
சந்தித்துக் கொள்ள வில்லை 
என்றாலும் 
சிந்திதுக் கொண்டிருக்கிறோம் 
என்பதை 
உணர்த்தி விட்டு வெளியேறுகிறது 
இந்த தும்மல்!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...