![]() பறையடிச்சி களமிறங்கும் காளையடா மச்சி |
சிறைபுடிச்ச பீட்டாவால் அழியுதடா |
மீட்டெடுக்க இளைஞர் படை போகுதடா எங்கும் |
அறவழியில் அகிலம் ஒண்ணா கூடுமடா |
அலங்கா நல்லூரில் இருந்து அமெரிக்காவரை |
சும்மா அதிருதுடா |
பால்
குடிக்கும் குழந்தையெல்லாம் கத்துதடா
|
அது தான் தமிழ் மரபின் கெத்துடா |
புள்ள தின்னா பாலு தரும் ஜீவனடா விடிஞ்சா |
தள்ளி நின்னு பார்க்குது ஜல்லிக்கட்டு காளையடா - மச்சி |
நிரந்தர தீர்வு கிடைக்கு வரை ஓயாதடா |
நிஜமெது நிழலெது நம் கண்முண்ணே விளங்குமடா |
பகலிரவு எண்ணிக்கையில் முடியுதடா -மச்சி |
பாட்டன் பூட்டன் கனவு இங்கே பலிக்குமடா |
ஏறு தழுவுதல் இளைஞர்களின் உரிமையடா நாளை |
எடுத்துரைக்கும் அரசியல் ஏட்டில் பதியுமடா |
குடியரசு தினம் ஒருநாள் நடக்குமடா அங்கே |
குனிந்தவர்கள் நிமிர்ந்துவிட்ட கோசம் முழங்குமடா |
-20.1.17 |
ஜல்லிக்கட்டு கவிதை
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
அருமையான கவிதை நண்பரே...
ReplyDelete