நெல்லை ஹெல்த்கேர் இதழ் ஜனவரி 2017

தலைத் தீபாவளி 
தடைபட்டுக்கொண்டே இருக்கிறது 
முதிர்கன்னி !

மறந்தது எனோ ?

பசியோடு பறந்து வரும் 
கொசுவை 
அடிக்க நினைக்கும் கைகள் 
பயிரால் அழியும் 
விவசாயிக்கு கைகொடுக்க 
மறந்தது எனோ ?

பரணி அக்டோபர் - டிசம்பர் 2016 இதழில்

நுனிப் புல்
மேய்ந்தபடி மான்... 
இரையானது சிங்கத்திற்கு ...!
அகல் விளக்கு 
குறுகிய முகத்துடன் 
சாமி பொம்மை ....!

கிறிஸ்மஸ் பாடல் !


Image may contain: text

குழந்தை ஏசு பிறந்துவிட்டார் வாருங்கள் 
குதித்து குதித்து மகிழ்ந்து பாடி ஆடுங்கள்

தொழுவத்திலே பிறந்தவரே பாருங்கள் 
தெகிட்ட தெகிட்ட அல்லேலூயா கூறுங்கள்  

ஏழைக்கு இரங்கச் சொன்னவரை தேடுங்கள் 
எதிரியையும் நண்பனாக்க ஓடுங்கள் 

அல்லேலுயா அல்லேலுயா பாடுங்கள்  
அகிலம் காக்கும் ஞானத்தையே நாடுங்கள் 

ஜீவனுள்ள தேவனையே போற்றுங்கள் இயேசு
ஜெபத்தை கேட்கும் உள்ளங்களை தேற்றுங்கள்

தமிழ் வாசல் - டிசம்பர் 2016

ஆயிரம் விளக்கு பகுதி 
பிரகாசமாய் எரியும் 
அரை ஜான் வயிறு ...!
கடமை தவறாத சூரியன் 
கதறி அழுகிறது
விவசாயி மனம் ...!
அளவறிந்து விதைப்பவன்
அறுக்கிறான் ....
அளவில்லா செல்வத்தை ..!
அன்ன தானம்
பசியோடு நிற்கிறது 
கோயில் சிலை ...!
அசையும் விழிகள் நடுவே 
அசையாமல் நிற்கிறது 
ஒர் கனவு ...!

அட்டைப் பக்கமாய் இரு !


Image result for birth and death

உன் 
பிறப்பும் இறப்பும் 
புத்தகத்தில் தடம் 
பாதிக்க வேண்டுமானால் 
அட்டைப் பக்கமாய் இரு !

சிந்திப்பீர் வாக்களிப்பீர் !

சரி நிகராய் அமர்ந்து 
சரசம் செய்ய 
அரசியல் ஒன்றும் 
அந்தரங்க மேடையல்ல பல 
சாமானியர்கள் அமர்ந்து 
சரித்திரம் படைத்த 
சமரச மேடை !
நீயா நானா வென போட்டியிட  
அரசியல் ஒன்றும் 
பொழுது போக்கு வியாபாரமல்ல 
பொறந்து வளர்ந்த 
தாய் நாட்டைக் காக்கும் 
பொக்கிச இருக்கை !
எடுத்தோம் கவிழ்த்தோம் 
வென இடம் பிடிக்க 
அரசியல் ஒன்றும் 
குடிக்கும் டம்ளர் அல்ல  
குடி மக்களின் 
குறைதீர்க்கும் கோபுரக்கலசம் !
இக்கரைக்கு அக்கரை பச்சையென   
இருப்பதை நிறுத்தி 
பண நாயகம் அழிந்து 
ஜனநாயகம் வாழ 
வாக்களிப்பீர் !

Dr. J ஜெயலலிதா

Image result for jayalalitha news update

ஆழ்ந்த இரங்கல்...!

"உலகிற்கோர் அம்மா இனி உன்னைப் போல்
உதவிட யாருமில்லை அம்மா

கனவுகள் மெய்ப்பட வைத்தவள் இன்று
கண்ணீரில் மூழ்கிட வைத்தாயே

நினைவுகள் நிலைத்திருந்த போதிலும்
உன் நிழலை மறைத்திட  வைத்தாயே

என்றும் நீ நீட்டிய விரலைக் காணவில்லை
உன்னால் ஈட்டியவர்கள் எவரும் நீட்டவில்லையே

காட்டிக் கொடுத்தவரெல்லாம் உன் கண் முன்னே
காலம் பதில் சொல்லும் புதுமைப் பெண்ணே

தகர்த்துவிட்டாள்

காதலிக்கும் போது 
தன் ஆசையை 
அடுக்கு மாடி கட்டிடம் போல் 
அடுக்கிக்கொண்டேன் போனவள் 
கல்யாணம் எனறதும் 
ஆஸ்த்தியைக் காட்டி 
அஸ்த்திவாரம் 
சரியில்லை என்று
தகர்த்துவிட்டாள்

நினைவின் மொழி ...

எட்ட முடியா 
தூரம் தான் 
என தெரிந்தும் 
எப்படி 
ஒரே நேர் கோட்டில் 
சந்திக்கிறது 
நம் 
நினைவின் மொழி ...!

கவிச்சூரியன் டிசம்பர் 2016 மாத மின்னிதழ்.

குளிர்ந்த நீரோடை 
சூடாகவே இருக்கிறது 
உழவன் மனது ...!
விடிஞ்சா கல்யாணம் 
வந்து சேரவில்லை 
தாய் வீட்டு சீதனம் ...!
குழந்தையின் கரம்பட்டு 
நிமிர்ந்து நிற்கிறது 
ஊன்று கோல் ...!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...