சிந்திப்பீர் வாக்களிப்பீர் !

சரி நிகராய் அமர்ந்து 
சரசம் செய்ய 
அரசியல் ஒன்றும் 
அந்தரங்க மேடையல்ல பல 
சாமானியர்கள் அமர்ந்து 
சரித்திரம் படைத்த 
சமரச மேடை !
நீயா நானா வென போட்டியிட  
அரசியல் ஒன்றும் 
பொழுது போக்கு வியாபாரமல்ல 
பொறந்து வளர்ந்த 
தாய் நாட்டைக் காக்கும் 
பொக்கிச இருக்கை !
எடுத்தோம் கவிழ்த்தோம் 
வென இடம் பிடிக்க 
அரசியல் ஒன்றும் 
குடிக்கும் டம்ளர் அல்ல  
குடி மக்களின் 
குறைதீர்க்கும் கோபுரக்கலசம் !
இக்கரைக்கு அக்கரை பச்சையென   
இருப்பதை நிறுத்தி 
பண நாயகம் அழிந்து 
ஜனநாயகம் வாழ 
வாக்களிப்பீர் !

2 comments:

 1. நாம் சிந்தித்து வாக்களித்தால் தமிழன் இன்னும் குனிந்து கிடக்கமாட்டானே...

  பணத்துக்கு அல்லவா வாக்கு அளிக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. இதுவரை குனிந்துவிட்டோம் இனிமேலாவது எழுந்து நிற்க முயற்சிப்போம் .... தங்கள் கருத்திற்கு நன்றிகள் பல ....

   எ கா :- ஆதி மனிதன்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...