| சரி நிகராய் அமர்ந்து |
| சரசம் செய்ய |
| அரசியல் ஒன்றும் |
| அந்தரங்க மேடையல்ல பல |
| சாமானியர்கள் அமர்ந்து |
| சரித்திரம் படைத்த |
| சமரச மேடை ! |
| நீயா நானா வென போட்டியிட |
| அரசியல் ஒன்றும் |
| பொழுது போக்கு வியாபாரமல்ல |
| பொறந்து வளர்ந்த |
| தாய் நாட்டைக் காக்கும் |
| பொக்கிச இருக்கை ! |
| எடுத்தோம் கவிழ்த்தோம் |
| வென இடம் பிடிக்க |
| அரசியல் ஒன்றும் |
| குடிக்கும் டம்ளர் அல்ல |
| குடி மக்களின் |
| குறைதீர்க்கும் கோபுரக்கலசம் ! |
| இக்கரைக்கு அக்கரை பச்சையென |
| இருப்பதை நிறுத்தி |
| பண நாயகம் அழிந்து |
| ஜனநாயகம் வாழ |
| வாக்களிப்பீர் ! |
சிந்திப்பீர் வாக்களிப்பீர் !
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
நாம் சிந்தித்து வாக்களித்தால் தமிழன் இன்னும் குனிந்து கிடக்கமாட்டானே...
ReplyDeleteபணத்துக்கு அல்லவா வாக்கு அளிக்கிறோம்...
இதுவரை குனிந்துவிட்டோம் இனிமேலாவது எழுந்து நிற்க முயற்சிப்போம் .... தங்கள் கருத்திற்கு நன்றிகள் பல ....
Deleteஎ கா :- ஆதி மனிதன்