| அடக்க விலையையே |
| மிஞ்சிவிட்டது |
| ஆடம்பர விலை ! |
| தேர்வாகாத நாள் காட்டி |
| தேர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது |
| காலம் ...! |
| மலடியின் வெளிச்சம் |
| ஒளிந்திருக்கிறது |
| அனாதை இல்லத்தில் ! |
| சட்டமன்றத் தேர்தல் |
| பாஞ்சாலியை தேடும் |
| கிருஷ்ண பரமார்த்மா ! |
| தொட்டில் குழந்தையை |
| மறந்து கோயில் கோயிலாக |
| ஏறி இறங்கும் தாய் ! |
| எந்த அலையின் பிரசவமோ |
| கரை ஒதுங்கியது |
| சிற்பிகள் ! |
| தானாகவே சரியாகிறது |
| எதிரே நிற்கும்போது |
| கண்ணாடியில் முகம் ...! |
| நள்ளிரவு மழை |
| நச்சத்திரங்களை தேடும் |
| நிலா ...! |
| நீர் கோழி |
| ஜலதோசத்தோடு |
| புகைப்படக் கலைஞன் ....! |
| மொட்டை மாடி |
| விடியலுக்கு காத்திருக்கும் |
| மொட்டை நிலவு ...! |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
சிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete