பிள்ளையார் பாடல் ...!எங்க பிள்ளையாரு இவர் எங்க பிள்ளையாரு 
பிள்ளை வரம் வேண்டி வந்தவருக்கு தங்கும் பிள்ளையாரு 
தங்கப் பிள்ளையாரு இவர் தங்கப் பிள்ளையாரு 
தஞ்சமென்று வருவோருக்கும் அள்ளித்தரும் அன்பு பிள்ளையாரு 
வெள்ளிப் பிள்ளையாரு இவர் வெள்ளிப் பிள்ளையாரு 
வேதமற்ற பக்தருக்கும் ஞானம் போதிக்கும் யோகப் பிள்ளையாரு
செம்பு பிள்ளையாரு இவர் செம்பு பிள்ளையாரு
செஞ்ச வினையெல்லாம் போக்க வந்த செல்லப் பிள்ளையாரு 
மண்ணு பிள்ளையாரு இவர் களி மண்ணு பிள்ளையாரு 
கர்ம வினையெல்லாம் கரைய வைக்கும் தொந்தி பிள்ளையாரு 
வண்ணப் பிள்ளையாரு இவர் வண்ணப் பிள்ளையாரு 
எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் பிள்ளையாரு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...