முருகன் பாடல் ...!

Image result for murugan

எனக்கெனப் பிறந்தவனை மறைத்து விட்டாயோ 
மீண்டும் பிறந்தவனை எழுத மறந்துவிட்டாயோ முருகா 
உனக்கெனக் கொடுத்துவிட்டேன் என்னுயிரை 
இனியும் உனக்கு என்மேல் தயவில்லையோ முருகா 
தனக்கென ஓரிடத்தைப் பதித்துவிட்டாயே உலகினிலே 
எனக்கென ஒரு இடம் தருவதற்கு மனமில்லையோ முருகா 
மணக் கவலை தீர மலை ஏறிவந்தேன் 
என்னை இனியும் மன்னிக்க மனமில்லையோ முருகா 
உனக்கிரு துணைவியர் இருக்கையிலே 
எனக்கொரு துணையினைக் கொடுக்க வரமில்லையோ முருகா 
மனமுருகி அழுதுவிட்டேன் உன் திருவடியில் 
இனியும் என் குலம் செழிக்க வழி வரவில்லையோ முருகா 
பலவகை பழம் படைத்துப் பசியாற்றிவிட்டேன் 
பல தலைமுறை  பாவத்தை போக்கிட மனமில்லையோ முருகா 
அனுதினமும் உன்னை வெறுத்ததில்லை இருந்தும் 
திருமணக் கோலம் காண வரமளிப்பாயோ முருகா
(முதல் முறையாக பக்திப் பாடல் எழுத முயற்சி செய்துள்ளேன் 
எப்படி இருக்கு கூறுங்கள் நண்பர்களே )

2 comments:

 1. அருமையான வேண்டுதல்
  முருகன் அருள் கிட்டும்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...