தமிழ்வாசல் ஆகஸ்ட் மாத இதழ் - 2016

தாமரை குளம் 
இலை மறை காயாய் 
பிம்பம் ...!
தொலை தூர பயணம்
விதைத்து செல்கிறது
பழைய நினைவுகள் ...!
தொட்டில் கட்டும் ஆசை
நிறைவு செய்தது
தாயின் பழைய புடவை ....!
சேமிப்பு பழக்கத்தை 
கற்றுக் கொடுத்தது 
பிச்சைப் பாத்திரம் ...!
எத்தனை முறை சுட்டாலும் 
ருசியை இழப்பதில்லை 
தோசைக்கல் ...!
மழை துளி பட்டதும் 
துள்ளி குதிக்கிறது 
பயமறியா இளங்கன்று ....!
குயவனின் கையில் 
அச்சில்லை .....
அளவில்லா பசி ...!
சூரியன் பார்வை பட்டு 
மெல்ல மெல்ல உருகியது 
மூடு பனி ...!
வற்றிய குளம் 
கரை ஒதுங்கிய விதை 
மரமானது ...!

3 comments:

 1. அருமையான வரிகள்
  தொடருங்கள்  குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
  http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...