ஈகை’ என்னுள் வந்ததெப்படி?தகப்பனாட்டம்
உதவாக்கரையாக
வளர்ந்து விடாதே
என்றாள் அம்மா! 

தாத்தாவாட்டம்
தண்டமாக
வாழ்ந்து விடாதே
என்றாள் பாட்டி! 

தாயும் தந்தையும் தவிர்த்துத்
தாய் மாமனாட்டம்
சோம்பேறியாக
இருந்து விடாதே
என்றார்கள்
அக்கம் பக்கத்தினர்!  

கடைசி பெஞ்சாட்டம்
அறிவை இழந்து
முட்டாளாகி விடாதே
என்றார் ஆசிரியர்! 

ஆனால் …
யாருமே சொல்லாமல்
எனக்குள் எப்படி
வந்தது இந்த ஈகைத் திறன்?

ஒருவேளை
இந்த உலகமே
நம்
கைக்குள்  இருப்பதற்குப்
பெயர்தான்
நட்பின் சுவாசமோ !

மனு நீதி சோழன் பாணியில் ...!பாலியல் 
பலரும் பரபரப்பாய் 
பேசப்படும் 
பத்திரிகை செய்தி 
படித்து முடித்தப் பின் 
கசக்கி எரியும் 
குப்பைத் தொட்டியின் 
நாற்றம் 
மாற்றம் செய்வோம் 
மரண தண்டனை கொடுக்க 
மனமில்லாத நீதி நூலை 
மாற்றி 
மறு பரிசிலினையாக  
ஆயுள் தண்டனையோடு 
சேர்த்து இலவசமாக 
அறுவை சிகிச்சை 
வழங்கி கௌரவித்தது 
மனு நீதி சோழன் பாணியில் ...!

ஆயுள் காலம் ...!நேசிக்க நேசிக்க 
சுவாசித்துக்கொண்டே 
இருக்கிறேன் ...
உன்னோடு சேர்த்து 
என் 
ஆயுள் காலத்தையும் ....!

தொடர் புள்ளி ...!அடைய முடியா 
ஆசைகளுக்கு 
முற்றுப் புள்ளி வைத்துப் பார் 
அடையும் ஆசைகள் 
தொடர் புள்ளியாகிவிடும் !

குரல்கொடுக்கும் குரங்குக்குட்டி...!அனுதினமும் நேசிக்கும்
என் தாயிக்கு
எப்படித் தெரியும்
அடுத்த தலைமுறைக்கு
இந்த மரக்கிளை
சொந்தமில்லை என்று!

சாதி மல்லி ...!காற்றை விடவும் 
லேசான....
அவளின் இதயத்தை 
குத்திக் கிழித்தது 
சாதி மல்லி ...!

தமிழ் வாசல் - மே 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)நகரத்து வளர்ப்பு புல்லில் 
ஒளிந்து கிடக்கிறது... 
கிராமத்தின் அழகு !
மித மிஞ்சிய பனிக்காலம் 
பாட்டியை நினைத்து ....
முனுமுனுக்கும் தாத்தா !
கீழ்தட்டு மேல் தட்டென 
மாறி மாறி சுரண்டும் 
அரசியல் வாதிகள் !
செங்கல் சூளையில் 
சேர்ந்தே வேகிறது 
சிறுவனின் கனவு !
படித்தும் 
முட்டாளாகவே இருக்கம் 
சாதிவகுப்பு !
மரத்தை வெட்டாதே
உடன் கட்டை ஏறியது 
மயானத்தில்  மரம் ...! 
வாடிய முகம் 
பூக்கிறது 
புன்னகையில் !

கடற்கரை…!முன்னுக்கு பின் 
முரணாகப் பேசிச் 
செல்லும் ....
அலையின் காதலுக்கு 
முற்றுப் புள்ளி வைத்தது 
கடற்கரை…!

அவளின் பயணம்….!
அலுப்பை போக்கும்
அதிகாலை
ஆண்டவன் அருளோடு 
அவளின்  பயணம்…. 
இறங்க மனமில்லை
இறங்கியது கால்கள்
சேலை வேட்டியானது
செஞ்சிலுவை சட்டை போட்டு
க ஞ்சிக் கலையம் தன் கண்மறைக்க 
கடகடவென்று
கடல்நீரைத் தளங்களில் பாய்ச்சிக்
கதிரவன் துணைகொண்டு
மடமடவெனக்
கோடுபோட்ட வரப்பில்
மஞ்சள் வெயில் மணத்தோடு
தகதகவென மின்னும் உப்பளத்தில் 
தாகம் மறந்து
தேகம் மெலிந்து
சோகம் குவியும்
சொப்பன வாழ்க்கையில் 
உடலோடு உழற்றும்
உப்புக் காற்றில்
கருவாடெனக் காய்ந்து
திருவோடு அறியாத
பிள்ளைக்காக
தினம் தினம் வெந்து தணியும்
வேள்வியில் 
உலகமே ருசித்திருக்க
உள்ளம் உருகுதே எங்கள்
உயிரும் கருகுதே 
எள்ளும் தண்ணியும்
இறைப்பதற்குள் 
இறைவா
எங்களை மீட்டெடுக்க வாராயோ
இல்லை மாற்று வழி தாராயோ!

பெயர் வினை !பிரிவின் வலி தெரிந்தும் 
பிரிந்துவிட்டேன் 
பிரித்துக் பிரித்துக் 
பிதட்டுகிறது 
பெருவினையோடு சேர்த்து 
அவனின் /அவளின் 
பெயர்வினையும் !

எதிர் நீச்சல் நீ போட…!இந்த வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெற்றிருப்பவரை அடுத்துச் சந்திப்போம்!
இன்மையாலும் (வறுமை), கணவன் மற்றும் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் இன்மையாலும், இப்புவியில் எத்தனையோ மங்கையர் உண்ண உணவின்றி, வாழ வழியின்றித் தம் வாழ்க்கையெனும் ஓடத்தை எதிர்நீச்சல் போட்டே செலுத்துகின்றனர். இதற்கிடையில், தம் குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்க அவர்கள் படும்பாடோ வார்த்தைகளால் விவரிக்க இயலாத துயர காவியங்கள்!
மிடிமை தன்னை அடிமைசெய்து வாட்டிவதைக்கின்ற போதினும், கோழையைப்போல் தன் மகளுக்குக் கள்ளிப்பால் ஊட்டாத ஏழைத்தாயை நம் கண்முன் நிறுத்தும் கவிதை நம்நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.
வறுமை வாக்கரசி போட 
சொந்த ஊரை விட்டு
சொப்பனம் தேடி வந்தேன் 
அப்பன் ஆத்தாளை மறந்து
அடுக்குமாடி கட்டிடத்தில்
அயராது உழைத்தேன் 
இருக்க மனையில்லை
இல்லறம் சுகமில்லை 

பறக்கும் காகம் போல்
கண்ட இடத்தில்
உண்டு உறங்கி
உயிர் வாழும் எனக்கு …
சிம்ம சொப்பனமாய்ச்
சீமாட்டி நீ தரிக்க
பெண்மையை உணர்ந்து 

பேறுகாலம் பெற்றேன் 
கள்ளி அறியாத்
தாய்ப் பாலை
சொல்லிச்  சொல்லி
கொடுத்தேன் என்
கட்டிச் செல்வமே 
நான் கட்டையில்
போகும் வரை 

உன் கடன் தீராதடி
முத்துச் செல்வமே
முழுமதியே 
இந்தச் சொத்தைத் தவிர
வேறில்லையே
இந்த உலகில்
எழுந்து விளையாடு
எதிர் நீச்சல் நீ போட…!
பொன்னும் பொருளும் இல்லையென்று கலங்காது, பெற்ற குழந்தையையே பெறற்கரும் சொத்தாக நினைந்துபோற்றும் அன்னையின் உள்ளத்தைத் திறந்துகாட்டியிருக்கும் திருமிகு. ஹிஷாலியைஇவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.
(http://www.vallamai.com/?p=68490)

கவிச்சூரியன் மின்னிதழ் -மே 2016...!


இறுதி ஊர்வலம்  
சேர்ந்தே பயணிக்கும் 
உதிரிப்பூக்கள் !
பயிர் கடன் 
களை எடுக்கிறது 
விவசாயி உயிரை !
கத்திரி வெயில் 
தொடக்கிவைத்தது 
சித்திரை திருவிழா !
அலையின் முத்தம் 
தொட்டதும் கரைகிறது 
 பாதச்சுவடுகள் ...!

புது புது ஞபகம் ...!நான் 
அமரும் இடத்தில் எல்லாம் 
உன்னை 
விட்டுவிட்டு போக நினைக்கிறேன் 
விடாமல் வந்து ஒட்டிக்கொள்கிறது 
வலியோடு சேர்த்து ஞபகமும் !

mhishavideo - 21