
| விண்ணில் தெறிக்கும் | 
| சூரியன் வரவில் | 
| செலவானது எனது | 
| காலைக் கடன் | 
| கருணையுடன் முடித்து வைத்த | 
| உணவுத்துறை | 
| எழுச்சி முகமாய் தொடரும் | 
| கல்விப் பணி | 
| மாமியார் மருமகள் | 
| கூட்டு முயற்சி | 
| மாமனாரின் சமூகப் புரட்சி | 
| அலுவலகப் பட்டி மன்றம் | 
| ஆண் ஆதிக்கத்திலும் சிறு | 
| அகிம்சை அன்பு | 
| இதெல்லாம் முடித்தப் பின் | 
| ஈவு மீதிக்கு எடுத்துச் | 
| சென்றது … | 
| மாலை நேர சுற்றுப் பயணம் | 
| மதிமயக்கும் மல்லிகை வாசம் | 
| சுட்டெரிக்கும் மணல் மேடு | 
| கைம்மாறு கருதாமல் | 
| கருங்கல்லைக் கட்டி அணைக்கும் | 
| கடல் அலை | 
| தும்பிக்கையாய் மாறி | 
| நம்பிக்கை நீர்தெளிக்க | 
| சுற்றத்தைவிட இன்பம் | 
| வேறில்லை என்று | 
| ஐயம் தெளிந்து | 
| புன்னகைத்தாள்! (http://www.vallamai.com/?p=68102) | 
 
 
 
சிறந்த பதிவு
ReplyDelete