| ஆதி மனிதனின் விவசாயத்தை |
| ஆராய்ச்சி மையமாக மாற்றிய அதிசயம் நீ |
|
புண்ணிய தீர்த்தத்தில்
|
| புலன் பெயரும் பொக்கிச விதை நீ |
|
துருவ
நட்சத்திரங்கள் பருவமடையப்
|
| பாதை வகுக்கும் சூரிய புத்திரன் நீ |
|
அனல் பறக்கும் பூமியைக்
|
| குளிர வைக்கும் குலக் கொழுந்து நீ |
|
மண்ணையும் பொன்னாக்கும் மழை
நீரை
|
| வீணாக்காப் பருவ பயிர் நீ |
|
அறுவடையின் அவசியத்தை
|
| அச்சில் பொறித்த ஆலயமணி நீ |
|
பாமரரும் பஞ்சம் பெயரா வண்ணம்
|
| பல் தொழில் சேவையாற்ற வந்த அட்சயப் பாத்திரம் நீ |
|
காலத்தை அளந்து காலனையும்
|
| விரட்டியடிக்கும் காவியத் தலைவன் நீ |
|
அன்று கருவிலே அறிந்ததால் தான்
என்னவோ
|
| பெயரிலே தெய்வமான நீ (சுவாமிநாதன் ) |
|
ஆயிரம் விருதுகள் பெற்றாலும் தன்
|
| அன்னை பெற்ற திரு உருவிற்கு ஈடாகுமா? |
|
என்ற புகழுடனே வாழ்க பல்லாண்டு
|
| வளர்க உங்கள் வேளாண் தொண்டு ...! |
எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க பல்லாண்டு
வளர்க வேளாண் ஆண்டு ...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறந்த பாவரிகள்
தொடருங்கள்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html