கண் மலை பறவைக்கு
இமை இலைக்
காடானாய்
இன்பத்திலும் துன்பத்திலும்
இடியுடன் கூடிய
மழையானாய்
காய் கனியுடன் கலந்து
கவியானாய் எங்கும்
காலங்கள் பூத்திடும்
காற்றானாய் ...!
மொழியுடன் கலந்து
இசையானாய் எங்கும்
மூச்சாய் வாழ்ந்திடும்
இறையானாய் ...!
இயற்கை எழில் மிகும்
வனமானாய் எங்கும்
நீயே உயிரின்
முதலானாய் ...!
மண்ணேடு காடுகள்
மறைந்து வீடானால்
கண் மலை எங்கே
பேசும் இமை மழை எங்கே
சொல் சொல் மானிடா...?
அழகு... அருமை...
ReplyDeleteமுடிவில் நல்ல கேள்வி...
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான கவிமழை! வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete