நட்பே நட்பை பிரித்தது ....!





உன்ன பெத்ததுக்கு ஒரு தென்னைய பெத்திருந்தாக் கூட தாகம் தீத்திருக்கும் என்றவாறே அம்மா வெளியில் வந்தாள் 

திட்டாதே அம்மா நான் நாளைக்கே சென்னை செல்கிறேன் அங்கு ஒரு கம்பெனியில் இருந்து எனக்கும் வேலை விண்ணப்பம் வந்துள்ளது 
இனிமேல் உன்னிடம் திட்டு வாங்க மாட்டேன். 

அப்படியா சந்தோசம் தான் பாத்து பத்திரமா போட என்றாள் கண்ணீர் தளும்ப 

சரி அம்மா அதற்கான துணிகளை எடுத்து வையுங்கள் நான் எனது நண்பர்களிடம் கூறிவிட்டு வருகிறேன் என்று சென்றான் 

மறுநாள் சென்னை சென்றான் அவன் எதிர்பாத்தவாறே வேலை கிடைத்தது மாதம் 10000 சம்பளம்.ஒரே சந்தோசமாக மாதம் கடந்தது அங்கு தனதுடன் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும் இவனிடம் சகசமாக பழகினார்கள் 

ஒரு நாள் இவனது நண்பன் ராம் டேய் உங்க ஊர் பொண்ணு ஒருத்தி எனக்கு தோழியா இருக்க நீ பேசுறியா என்றான் 

அந்த பொண்ணு மிகவும் நல்ல பொண்ணு பெண்களுக்கு உண்டானா எல்லா தகுதியும் இவளிடம் காணலாம் இவளும் உங்கள் சாதி தான் பேசுறியா என்றான் 

சிவாவும் சரி அவள் பெயர் என்ன 

அவள் பெயர் நிலா என்றான் ராம் . 

முதலில் worng  நம்பர் மாதிரி அவளிடம் விளையாண்டான் சிவா 

அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை நிலா 

பின் நான் தான் ராம் தோழன் அவர் தான் உனது நம்பர் கொடுத்தார் என்றான் 

அதற்கும் நிலா பதில் அனுப்பவில்லை பல முறை போன் செய்தான் அட்டன் செய்யவில்லை 

பின் ராம் நிலாவிற்கு போன் செய்து சிவா நல்ல பையன் வெரி குட் character நீ அவன்கிட பேசிப்பாரு புரியும் என்றான் 

நிலவும் சரி என்று சிவாவிடம் பேசி வந்தாள் 

இருவரும் நல்ல நண்பர்களாகவே பேசி வந்தனர் இடையில் ராம் இவர்களின் நட்பை கண்டு பொறாமை கொண்டான் 

இவர்கள் இருவரும் காதலித்து விட கூடாது என்று இருவரையும் பிரிக்க 
திட்டம் தீட்டினான் 

ஒரு நாள் சிவாவை பற்றி தவறாக கூறினான் நிலாவிடம் 

நிலாவும் ராம் சொல்வதை நம்பி சிவாவிடம் பழகும் விதத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தாள் 

ஓர் நாள் சிவா ராமுவை பற்றி அவன் நாம ரெண்டு போரையும் பிரிக்க திட்டம் போடுறான் உனக்கு நான் முக்கியமா இல்லா ராமு முக்கியம் என்று கூறும் போது இவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தாது 

உடனே ராம் தான் உங்களை என்னிடம் அறிமுகபடுத்தினார் சோ அவுங்களையும் என்னால் விட்டு கொடுக்க முடியாது உங்களையும் நான் விட்டு கொடுக்க முடியாது இருவரும் என் இரு கண்கள் மாதிரி என்றாள் நிலா 

உடனே சிவா நீ இதுவரை என்னை புரிந்துகொள்ள வில்லை காரணம் நான் உனக்கு முக்கியம் இல்லாதவனாய் போய் விட்டேன். அனால் நீ எனக்கு முக்கியமானவள் இதை உனக்கு புரியும் போது என்னை தேடி வா நான் காத்திருக்கிறேன் அதுவரை இனிமேல் என்னிடம் பேசாதே என்று விலகிவிட்டான். 

உடனே ராம் போன் செய்து நீயும் சிவாவும் லவ் பன்னுறேங்களா அப்படி என்றால் தைரியமாக என்கிட்ட சொல்லு நானே சேர்த்து வைக்கிறேன் என்று கேட்க 

நிலா இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் மாதிரி தான் பேசுறோம் என்றாள் 

அப்போம் ஏன் உங்கள் இருவருக்கும் சண்டை என்றான் 

எனக்கு தெரியாது. 

நான்வென சிவா கிட்ட பேசட்ட என்றான் 

வேண்டாம் என்றாள் நிலா 

ஏன் 

ஐயோ அவன லவ் பண்ணுறேன்னு தப்ப நினைத்து என்கிட்ட சண்ட போட்ட அதன் பேசல, நீங்க போய் கேட்ட அது உண்மையாகிவிடும் அதான் வேண்டனு சொல்லுறேன் 

ஆமா நிலா என்கிட்டே கூட நீயும் நானும் லவ் பனுரோமொனு தாப்பா பேசிருக்கான் என்னோட இன்னொரு நண்பன் கிட்ட எனக்கு இப்பதான் தெரியும் என்றான் 

அப்படியா ச்ச்ச அவன்கிட ஏன்டா பேசுநோமொனு இருக்கு ராம் இனிமேல் யாரையும் எனக்கு நன்பனா அறிமுக படுத்தாதீங்க என்றாள் நிலா 

ராம் ஓகே இதுவும் எனக்கு ஓர் பாடம் என்று பிரிந்தான் ................ 

சில மாதங்கள் கழிந்தது ஓர் நாள் சிவாவும் நிலாவும் சந்தித்தனர் அப்போது தான் உண்மை புரிந்தது ராமுவின் சூட்சுமம் 

காரணம் இருவரும் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசாததால் நல்ல நட்பு பிரிய காரணமாக உள்ளது என்று புரிந்து மீண்டும் சேர்ந்தார்கள் 

தன்வினை தன்னையே சுடும் என்ற பொருளுக்கேற்ப நட்பை கொச்சை படித்தியதால் ராமுவும் நிலாவும் பிரிந்தார்கள். 

நன்றி !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145