திருநங்கை ...!


ஒரு முகமாய் பிறந்து
இரு முகமாய் தோன்றும்
புது முகமே

அன்று
மறைமுகமாய் வாழ்ந்த
விலை முகங்கள்

இன்று
நிலை முகங்களாய்
நீந்தும் உலகில்

தனக்கென
குல முகமாய் கை கோர்த்து
குடும்பமாய்

திரு மேனி
திருத்தங்களில் அழகு மேனியாய்
நம்மில் அங்கம் வகித்த

நவமேனியே உன்னை நாங்கள்
திருநங்கை என பெருமிதம்
கொள்கிறோம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145