டெஸ்ட் டியூப் பேபி..?


கற்பு என்பது காலி பாட்டிலில் நிரப்பி
கண்டம் தாண்டி எரியும்
கண்ணாடி சிதறல்களில்
குத்தி கிழிக்கும் மானங்கள்

ஏழனமாக விடை தேடுகிறது
பணத்தில் பிறக்கும் டெஸ்ட்டியூப்
குழந்தையாய் கண்ணகி பிறந்த
மண்ணில் கற்புக்கும் விலையுண்டோ

காகித எண்ணில் கப்பலாய் பறக்கும்
இந்திய பெண்ணின் மானங்கள்
இமையம் முதல் குமரி வரை
இதயமில்ல சடலங்களில்

உடையை மாற்றுவது போல்
கருவை மாற்றும் கலங்கரை
விளக்காய் வழி இல்லா தீவிற்கு
மொழியில்ல முதல் எழுத்தாய்
தலை முறை தாண்டுகிறது
நம் தமிழ் திரு நாடு ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு