காதல் கன்னி.!


என்னில் வந்த உறவே
நீ எங்கு சென்றாய்
என் கண்ணில் வந்து
போகும் காட்சி பொருளாய்
களவாடிய மொழியை

காதல் மொழியால் விளையாட
விட்டு ஊமை விழியால்
என் உயிரில் கலந்து
கனவுகள் படைக்கும்
நினைவு தோட்டத்தில்

நிதம் நிதம் பூக்கும்
காதல் தேனை நான்
மட்டும் பருகாமல் நாள்
மட்டும் கடந்தால் என்
நாணத்தின் சிவந்த விழிகள்

நலிவிழந்தாற்போல் தேகம்
வாடி மோகம் கூடி
யாகமாய் வாழ்கிறது காதல்
தீயில் வெந்த கன்னி.!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன்  மண் விழுந்தது மூடநம்பிக்கையில்