சூப்பர் ஸ்டார் ரஜினி....!


வயதில் முதியவர் என்றும்
வார்த்தையில் இளையவர்
வானில் உயர்ந்தவர் நல்
வாழ்க்கையை வென்றவர்

ஞானியில் சிறந்தவராய் நடிப்பில்
நாட்டையே ஆண்டவர்
துரும்பிலும் புகுந்தவர் எத்
துயரிலும் உயிர் திறந்தவர்

இமையமும் சென்றவர் இளைய
இதயங்களில் வாழ்ந்தவர்
கடலையும் கடந்தவர் காதல்
கடமையில் திகழ்ந்தவர்

பாரினில் உதிர்ந்தவர் தமிழ்
பண்பாட்டில் தலை சிறந்தவர்
ஊரினில் சிலையானவர் ஏழை
உள்ளங்களில் நிலையானவர்

ஸ்டாரில் வெளியானவர் தன்
ஸ்டைலில் மன்னனானவர்
இதோ குறிஞ்சிபூவாய்
தாள் திறந்து தமிழ் மண்ணில்

திரைப்பூவாய் தெவிட்டாத வேடத்தில்
ரஜினியாய் தன் ராஜ்யத்தையே
ஆண்ட அணையா விளக்காய்
அரியதோர் சாதனையால் தன்

ஆன்மீக தேரில் அமைதியின் சிங்கமாய்
அங்கம் வகிக்கும் தங்க சூரியனே
எல்லா புகழும் பெற்று இனிதே வாழ
வாழ்த்துகிறோம் போற்றுகிறோம்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...