பாரதியார் வாழ்த்து ...!


நம் பாரினில் பிறந்த பாரதியாம்
தமிழ் ஊரினில் வளர்ந்த ஓர்ஒளியாம்

தேசிய கீதத்தின் தேன் துளியாம் நம்
தேகத்தில் ஊன்றிடும் பேர்றோளியாம்

சாதிமதத்தையே சாய்த்தவராம் எங்கள்
சத்திய தாயின் தலை மகனாம்

நீதி நூல்களில் நின்றவராம் பெண்கள்
நீதிக்கோர் தன்னை அற்பனித்தவராம்

கவி பலவும் கண்டவராம் நெஞ்சில்
கண்ணமாவை மணம் கொண்டவராம்

ஊரில் பல மொழி கற்றவராம் தமிழ்
ஊற்றாய் உயிரில் கலந்தவராம்

வந்தே மாதரம் தந்தவராம் நாட்டில்
வாங்கிய சுதந்திரம் போற்றியவராம்

புஞ்சை நிலங்களையும் பாடியவராம் நல்
போதனை சொல்லும் தமில்புதல்வராம்

அவர் எஞ்சிய உயிர் மாண்டதிலே உயிர்
எழுந்துநிற்கும் சிலைகளிலே கண்டிடுவோம்

பல்லுயிர் தந்த பாரதியை நாம்
பள்ளியில் படித்து மகிழ்ந்திடுவோம்

இனி எத்திசையிலும் புகழ் மனக்க அவர்
எடுத்த சபதம் முடித்திடுவோம் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு