விளம்பரமே வாழ்க்கை !


விலை போகா விளை பொருளுக்கு
விடை தேடும் சாதனமே விளம்பரம்

இதன் மொழி வேறு இசை வேறு
ராகம் வேறு ரகம் வேறு இருந்தும்

விளையாடும் முகம் வேறு தரம் வேறு
விதவிதமாய் மாறும் பொருள் வேறு

யுகம் யுகமாய் வாழும் மனிதா உன்
யுக்திக்கு எட்டும் அறிவை மறந்து

மோக வலையில் சிக்கிய எலியாய்
முதலை இழந்து முதலை ஆளும்

வயதை இழந்து வாழ்க்கையின்
முடிவில் மரணத்தை தேடுகிராயே - இனி

இயற்கைக்கு இணையா உணவும் இல்லை
இல்லறம் செழிக்கும் உலகும் இல்லை ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்