முத்தம் தா ....!


கண்ணே மணியே முத்தம் தா
கட்டி வைரமே முத்தம் தா
செல்லக் கிளியே முத்தம் தா
சொர்க்கத் தங்கமே முத்தம் தா
பாலும் நெய்யே முத்தம் தா
பஞ்ச வர்ணமே முத்தம் தா
ராஜா மந்திரியே முத்தம் தா
ராஜ்யத்தை ஆளுபவனே முத்தம் தாதங்கத் தொட்டிலுக்கு ஈடாக என்
தங்கமே தாய்சேலைத் தொட்டிலில் தாலாட்ட

பஞ்சு மெத்தைக்கு ஈடாக என்
பவளமே கொஞ்சும் மடியில் நீ தூங்க

அள்ளி அனைத்து பாலுட்ட என்
ஆயுள் முத்தம் சோறூட்டா நான்

சொல்லி தந்தேன் நம் சொந்தமெல்லாம்
சொர்க்க தங்கமே நீ கண்ணுறங்க

மெல்ல சிரிக்கும் புன்னகையால் என்
ஜென்மம் ஜெயித்து நான் வாழ

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...