காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!


காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அங்கே

ஊற்றுமுயிர் துடிக்கையிலே பொன்னம்மா - எந்தன்
ஊமையுயிர் வெந்து சாகுதடி - உன்

செவ்விதழ் வருடும் பேச்சினிலே - அமுதம்
செவ்வியில் சென்று மோதுதடி - என்

கண்விழி பிதுங்க காத்திருக்கேன் - அன்பே
காணுமிட மெல்லாம் பூத்திருப்பேன் - நெஞ்சில்

ஏக்கம் தரு தூக்கத்திலே உன்னை
எண்ணி எண்ணி மனம் வாழுதடி

மூச்சி வரையும் நின்று தன்னை என்
மூளை எல்லாம் பித்தம் ஏறுதடி - இதை

தூற்றும் கண்கள் நடுவினிலே நம்
தூய நினைவுகளை பார்க்கின்றேன்

நாளு பொழுதும் மறைந்தாலும் கண்ணமா
நான் கொண்ட காதல் அழியாதே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...