காதலில் விழுந்தேன் ....!


தூங்காத விழிகளில் தாங்காத கனவுகளை
ஏங்காமல் தூங்கிவந்தேன் அன்பே - மீண்டும்
கனவாக மலரும் நினைவுகளை கண்டு

தூங்காமல் நான் இசைக்கிறேன் - துளிர்விடும்
காலை பொழுதில் எல்லாம் அவளாய் இதோ
கண்சிமிட்டும் கதிரவனின் கார்முகில் கோலமாய்

மங்கையவள் மலர் கணைகள் என் மஞ்சத்தில்
அங்கம் வைத்து சங்கமாய் கொண்ட தேநீரில்
என் தேகம் குடித்து மோக குளியலில் நனைந்து

மூச்சுக் காற்றில் உயிர் பேசும் பதுமையாய்
தமிழ் பேசி தலை முதல் பாதம் வரை
தன்னிலை மறந்த பெண்னிலையாய் மாற்றம்
செய்தவள் என் கண் முன்னே வந்து

காகித கவிதையாய் என் கட்டில் தாலாட்டில்
கண் மூடி தூங்குகிறாள் நிதம் நிதம் நிம்மதியில்லா
ஆண் மதியை வென்ற பெண் மதியே நீ
என் மதி வானில் பறக்கும் திருமதி பெண்ணாய் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு