திருவள்ளுவர் ...!















யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல்
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145