ஜாஹீதாபானு...!


ஈகரை இதயங்களின்
வருகை பதிவேட்டில்
வணக்கம் சொல்லி

வளவளவென வாழ்த்தும்
முதுகை சீமாட்டியாய்
முத்தான பதிவுகளில்
சொத்தான பாட்டி

அரசியல் முதல்
ஆன்மிகம் வரை
அசத்தும் பதிவில்
கலக்கல் கவிதையும்
காலத்தின் சீற்றங்களை
சுட்டி காட்டும்
சமுதாய பெண்ணாய்

உள் சென்று விழி கொண்டு
இசைக்கும் மதிப்புகளால்
அவரவர் மெயில் தேடி

எண்ணில் அடங்க
வண்ண வரிகளில்
வாயடிக்கும் பானு பாட்டி

முத்தமிழ் உருதுகளை
தாய் மொழியாய் பெற்றாலும்
தமிழ் மொழி கொண்ட
ஈகரையில் தனகோர்
இடம் கொண்டு
மகளீர் மங்கையாய்

மனம் மயக்கும் சமையலிலும்
ருசிக்கும் மருத்துவமாய்
பிறக்கும் முகப்புகள் தேடி
முடிவில்லா கேள்வி பதிலில்
முடிவுற்ற தகவல் தந்து
தனக்கோர் தனி மடலாய்
தமிழ் சிரிக்கும் மனதில்

இஸ்லாம் பெண் மணியாய்
ஈகரை இதயங்களை
வருடி கொண்டு வளம்வரும்
இல்லத்து அரசியானவள்

சொல்லமுது பெற்ற
செல்வங்களுடன் சேர்ந்து
சீரும் சிறப்புடனும் வாழ
ஹிஷாலீயின் கவிதை
வாழ்த்துக்கள் ....!


இமெயிலுக்கு ராஜாவானாலும்
ஈகரை பாட்டி சொல்லை தட்டதே

பகிர்வுக்கு பதிலடி கொடுக்கும்
பாட்டி சொல்லை தட்டதே

அவரவர் குறைகளை
அவரவர் நிறைகளை
கலந்திடும் உறவின்
கதை சொல்லும் பாட்டி
சொல்லை தட்டதே .....!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...