விநாயகர் வாழ்த்து ...!


வழித்துணை விநாயகனே உன்னை 
வணங்கிடும் மனதில் அமைதி 
விளங்கிடும் மனமாய் முன் நின்று 
பின் செல்லும் வழிகாட்டியாய் 
வாழ்க்கை துணைவனே நீ .....!

முதல் எழுத்தின் தலை எழுத்தாய்
மும்மூர்தியின் மைந்தனே உன் 
முகம் காணும் மக்களுக்கு பல 
யுகமாய் இருக்கும் குறைகளை 
கலைந்து கருணை வடிவில் 
கண்ணீர் துடைக்கும் கற்பக பொருளே .....!

உன் திருநாமம் தினம் தினம் 
கேட்கும் மனதில் ஒரு நாமமாய் 
உள் சென்று திரு நாமமாய் இத்
தரணியில் தலை காட்டும் நீ .....

தன்னிகரில்லா தலைவனாய் என் 
தலைவிதியை மாற்றி ஒரு மதியாய்
என்னுயிரில் கலந்து உறவாடும் 
விநாயகனே உன்னை மனதாற 
போற்றுகிறேன்......! 

என் மக்கள் .....
எல்லா நலமும் வளமும் பெற்று 
மெய் மக்களாய் மென்மேலும் உயர 
வணங்கி வாழ்த்துகிறேன் .....!

4 comments:

 1. படமும் வரிகளும் அருமையா இருக்குங்க...

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. அழகான படம்.

  அருமையான வேண்டுதல்.

  //என் மக்கள் .....
  எல்லா நலமும் வளமும் பெற்று
  மெய் மக்களாய் மென்மேலும் உயர
  வணங்கி வாழ்த்துகிறேன் .....!//

  பொதுநல்ப் பிரார்த்தனை.

  மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள்.

  விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

  vgk

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு