நாளை என் காதல் சாகுமானால் இன்றே
தேடுகிறேன் வேறு காதலை ...
அழகற்ற நாயகனின்றி - நல்
அறிவுற்ற மனிதனாய் வேண்டும்
இதயமற்ற தருணங்களிலும் - சற்று
இறங்கி வரும் கண்ணீர் வேண்டும்
கணித மேதையாகாவிட்டாலும் - நாளைய
கனவுகளை மேதையாக்கும் கற்பனை வேண்டும்
வசதியற்ற வள்ளலாகாவிட்டாலும் - என்றும்
வரைமுறை தவறா தூயவன் வேண்டும்
ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகாவிட்டாலும்
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும்
என்று வலை போட்டு தேடுகிறேன்
இன்றைய காதல் வாழ வேண்டுமானால் - நேற்றையக்
காதல் பாடமாக வேண்டும் ...!
supper
ReplyDelete