ஹிஷாலீ ஹைக்கூ - 9

மதிக்காத பொருளை மிதிக்கும்  
உலகில் செருப்பும் சாதிக்கிறது  
வெறுப்பில்லா மகளிடம் .   
அன்று வீட்டுக்குள்  
வீடு கட்டிய சிலந்திக்கு  
இன்று காட்டில் கூட இடமில்லை   
சொல்லி கிழிபட்டு  
அழுகிறது  
கண் ...!   
முகமும் அகமும் இல்லை  
மூன்றாம் விழி! 
மூக்குகண்ணாடி 
கீதை குரான் பைபிள்  
மூலப் பொருள்  
கடவுள் 
துயிலை இழந்த மயில்  
பசிக்கு விலையாகிறாள்  
விலைமாது  
பிறப்புகள் நூறு  
இறப்புகள் பலநூறு  
சிலுவை சுமந்தது மலர்கள்   
இடி மின்னல் பட்டு  
கிழியுது வானம்  
புண்ணிய தீர்த்தம்   
தலை பூ  
தன்னிகரில்லா  
தாயகம்   
எழுத்தறிவின்மை  
குழந்தைத் தொழிலாளர்  
மாறிவிட்ட சமுதாயம்   
கரும் பலகை  
கணிணியாக்கம்  
மருவிய விழிப்புணர்வு   
ஏழை பணக்காரர்  
இறுதி சொத்து  
மண்ணின் மைந்தர்   
வறுமை வென்றது  
வாழ்க்கை கொன்றது  
எழுத்தறிவில்   
விசுவாசம்  விவசாயம் 
குறைந்துவிட்டது  
வீட்டு மனைதிட்டம்   
புஞ்சை நிலமும் நஞ்சு  
பருவ மழை  
தவறினால்          

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145