சென்ரியுவாய்த் திருக்குறள் -10


குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

கலைஞர் உரை: 
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

ஹிஷாலியின் சென்ரியு:

இரு கரைகள் 
துடுப்பு 
கணவன் ...!

ஜென்மம் 
நீந்துகிறது 
கடவுளின் திருவடி...!

சாமி 
ஆசாமியகிவிடமுடியாது 
கடவுளை அன்றி ...!

சென்ரியுவாய்த் திருக்குறள் - 9


குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

கலைஞர் உரை: 
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

மு.வ உரை:கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா உரை:எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.ஹிஷாலியின் சென்ரியு

அரசனும் 
வணங்குகிறான் 
ஆயிலை பெருக்க ...!

ஐம்புலன்கள்
நல்ல பண்பு 
அடக்கம் ...!

சிறியவர் பெரியவர் 
வணங்குதல் 
நற் பண்பு ...!

சென்ரியுவாய்த் திருக்குறள் - 8


குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது


கலைஞர் உரை: 
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.


மு.வ உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.


சாலமன் பாப்பையா உரை:அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.


ஹிஷாலியின் சென்ரியு :

கடலளவு துன்பம் 
கடுகளவு 
இறைவன் திருவடி...!

சொர்க்கம் 
கசக்கிறது 
முனிவர் ...!

மாற்றான் துன்பம் 
அகற்றும் மருந்து 
தானம் ...!

சென்ரியுவாய்த் திருக்குறள் - 7


குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


கலைஞர் உரை:ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.


மு.வ உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.


சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.ஹிஷாலியின் சென்ரியு 

தீரா மனக்கவலை 
கடவுளின் திருவடியில் 
யார் பெரியவன் 

ஈகை 
இன்பம் 
மனக்கவலையின் மருந்து 

மனக்கவலை
போக்கும் மருந்து
தொலைக்காட்சி 

தாழ்வு மனப்பான்மையற்ற 
மனிதன் தன் 
சுற்றத்தையும் சுமப்பான் 

சென்ரியுவாய்த் திருக்குறள் - 6


குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

கலைஞர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மு.வ உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

ஹிஷாலியின் சென்றியு 

ஒழுக்கத்தின் 
ஐம்பொறிகள் 
வீடு பேறு

தீமையில்லா ஆசை 
ஒழுக்கத்தில் அடக்கம்
நிலையான புகழ்வாழ்வு 

பொய்யற்ற 
ஒழுக்கம் 
கடவுளுக்கு சமம் 

சென்ரியுவாய்த் திருக்குறள் - 5

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


கலைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
மு.வ உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

ஹிஷாலியின் சென்ரியு :


கண்ணில் உண்மை 
கடவுளின் அன்பு 
மறையும் நல்வினை தீவினை 

கல்லில் கடவுள் 
சொல்லில் அன்பு 
நலமான வாழ்வு 


சென்ரியுவாய்த் திருக்குறள் - 4


குறள் 4: 
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


கலைஞர் உரை:விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

ஹிஷளியின் சென்ரியு :

விருப்பு வெறுப்பு 
மாறி வாழ்கிறது 
கூட்டுக்குடும்பங்கள் 

ஆசை அகிம்சை 
இல்லாத மனிதன் 
கடவுள் 

விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள் 

சென்ரியுவாய்த் திருக்குறள் - 3


குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

கலைஞர் உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.ஹிஷாலியின் சென்ரியு 


தோல்வியும் 
மணக்கிறது 
இறைவனின் திருவடியில் 

கர்மங்கள் 
கரைகிறது 
புண்ணிய மலர்கள் 

உயிர்கள் உள்ளவரை 
விழித்திருக்கும் 
திருக்குறள் 

சென்ரியுவாய்த் திருக்குறள் - 2


2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.


*( தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.)

என்ற இரண்டாவது திருக்குறளுக்குச் ஹிஷாலியின்  சென்ரியு:ஏட்டு சுரைக்காய் 
எழுந்து வணங்கியது 
அரசியல்வாதி

அதிகம் படித்தவன் 
காலில் வணங்கினான் (அடங்கி வாழ்கிறான்) 
அரசியல்வாதி

அதிகம் படித்தவன் 
அடங்கி வாழ்கிறான்
அலுவலகத்தில் ...!

சென்ரியுவாய்த் திருக்குறள் - 11. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

(அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.)


என்ற திருக்குறளுக்கு ஹிஷாலியின் சென்ரியு :

உலகின் 
கடவுள் 
அ ஆ ...!

ஆதி 
அகரம் 
உலகின் இதயம் 


ஹிஷாலீ - ஹைக்கூ 11

வேர் தூங்கும் 
நிலத்தில்   
பசி துறந்தது பார்...! 
வேர் தூங்கும்
மண்ணில் 
விஷம் விரையமானது...! 
பொக்கிச வேர்கள் 
பொய்யானது 
அருமருந்தற்ற பிளாஸ்டிக் 
 திரு 
திருமதி 
மூன்றாம் வெகுமதி...!
பாலைவனம் 
சோலைவனம் 
வெற்றி தோல்வி...! 

சென்ரியு - 1
ஹரிஜன் 
கடவுள் 
அம்பேத்கர்


சட்டம் 
தலை நிமிர்ந்தது 
அம்பேத்கர்நீதி 
தலை குனிந்தது 
வாய்தா ...!கண்கெட்டி வித்தை 
உஷ் 
ஓடிவிட்டது நீதி...!புன்னகை 
ஒளிந்துகிடக்கிறது 
பணத்தின் கீழ்...!
சுதந்திரம் 
மறைந்திருக்கிறது 
அரசியலின் கீழ்...!
தாடிக்குள்
எத்தனை கேடிகள் 
நேத்திகடன்..!

இதற்கு பேர் தான் காதலா ...?


அலை தொட்டால் கரையும் கரையும் 
அணை தொட்டால் நீரும் குறையும் 
பெண்ணே உன் இமை தொட்டால் 
உயிரும் கரையுதடி என் உணர்வும் பெருகதடி 
இதற்கு பேர் தான் காதலா ...?


ரோஜா கூட்டம் ...!


வாடா மலராய் 
வலம் வரும் 
உன் கண் மலர்கள் 

என்னை 
வாடா வாடா என்று 
வாட்டியதால் 
வாடினேன் 

ஒரே நாளில் 
உதிர்ந்து பூக்கும் 
காதல் விதையாய் 

பெண்ணே 
நீ உரமாக வந்தால் 
நான் பதமாக 
பார்த்துக்கொள்வேன் 

நாளை பயிரிடும் 
ரோஜா கூட்டத்தில் 
ராஜாவாக ............!ஈழ அழுகுரல்......!

மயானமாய் மாறிய 
மரணக் குழியில் 
அம்மனமாய் 
அழுகிய ஈழ உடல் 

சிங்களத்து முள்வேலியில் 
சிறைக் கெஞ்சிய உயிர் 
வேடந்தாங்கலாய் 
வெளியேறிய சாபம் 

கோழி கூடாரத்தில் 
கொத்தித் தின்னும் 
பருக்கையாய் 
பசியை மறந்த ஈழ பாவிகள் 

தாய்ப்பால் அருந்திய 
தமிழன் தலையில்லா 
குதிப்பால் 
குடிக்கும் ஈழத்து மண் 

கழுகுக்கும் காக்கைக்கும் 
இரையாய் கருகிய உடல்கள் 
இரத்தக் கரைகளாய் 

உறவைப் பார்த்து அழுகும் 
பச்சிளம் குமரிகள் 
உடுத்த ஆடையில்லா 
வெக்கத்தில் 
முகத்தை மூடும் 
ரத்த விரல்கள் 

சிங்கள வேலிகளுக்குச் 
சரீர பின்னலாய் 
தன் மூச்சை நிறுத்த 
சுதந்திரமில்லை 
சுதந்திர தேசத்தில் 

ஒற்றைக் கால் 
மரத்தைப் போல் 
சட்டைக் கால் போட்ட 
சாம்பவன்கள் 
நாடோடியாக 

ஆறடி தோண்டவில்லை 
அழுவதற்கும் யாருமில்லை 
அடைக்கலம் பூண்ட 
ஈழனுயிர் 
அணையா விளக்காய் 

உறவே அறியா உருவத்தில் 
உதிர்ந்து தொங்கிய 
மொட்டை சரீரங்கள் 

விடியும் நாளை நோக்கி 
விழித்திருக்கும் 
ஊமை விழிகள் 

ஈழ தமிழச்சி..!

பெண்ணின் அங்கத்தைப் 
பேன் பார்த்த ராணுவம் 
கறுப்பைக் காமத்தால் ரசித்த 
கயவர்களைக் கண்டு 
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய் 

முடியும் விடியலாய் 
மின்னும் வானம் 
என் பக்கத்துத் தமிழன் 
ஈழத்தில் ஒளிரும் போது 

என்றோ அரை கூவிய 
புள் முளைக்காகச் சீனாவைப் போல் 
பேர் பெற்ற நாடாய் மாறும் 

அன்று 
என்னைத் தீட்டிய ராணுவமே 
என் தமிழைத் தீட்டித் 
தங்கப் பதக்கம் தரும் நாள் 
எந்நாள் என்றோவென 

காத்திருக்கிறோம் 
கண்ணீர் சொட்டக் 
கரையைத் தேடும் 
ஈழ தமிழச்சியாய் 

தாகம் தீரு மெதுவா...!

குளுருக்கு அணைக்கணும் 
உயிருக்கு மிதமாய் 
கருவுக்கு பதமாய் 
பூவே சுகமாய் 
இல்லை நீ 
வெறும் பூகம்பமாய் 

வெயிலுக்கு அணைக்கணும் 
வியர்வைக்கு மிதமாய் 
பகலுக்கு பதமாய் 
மானே பார்வை சுகமாய் 
இல்லை நீ 
வெறும் பாதரசமாய் 

வானவில் இடுப்பழகி 
வாயாடி பேச்சழகி 
கத்திவேல் கண்ணழகி 
கார் மேக உடலழகி 

பொத்தி வச்ச 
ஆசையெல்லாம் ஓர் 
போர்வைக்குள்ள 
பூட்டி வச்சி 

அட்டை போல 
ஒட்டிக்கொண்டு என் 
ஆசையத்தான் தூண்டுரையே 
மேகம் போல வரவா 
என் தாகம் தீரு மெதுவா

mhishavideo - 21