ஹரிஜன்
கடவுள்
அம்பேத்கர்
சட்டம்
தலை நிமிர்ந்தது
அம்பேத்கர்
நீதி
தலை குனிந்தது
வாய்தா ...!
கண்கெட்டி வித்தை
உஷ்
ஓடிவிட்டது நீதி...!
புன்னகை |
ஒளிந்துகிடக்கிறது |
பணத்தின் கீழ்...! |
சுதந்திரம் |
மறைந்திருக்கிறது |
அரசியலின் கீழ்...! |
தாடிக்குள் |
எத்தனை கேடிகள் |
நேத்திகடன்..! |
ஹைக்கூ அரசியல் தலைவர்களைப் பற்றியோ, திருவள்ளுவர் போன்ற புலவர்களைப்பற்றியோ தனிப்பட்ட நிறுவனத்தையோ மனிதனையோ பாடாது... (இன்று ஹைக்கூக் கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் இந்தத் தவற்றைச் செய்கிறார்கள்... இது அவர்களின் அறியாமை அல்லது சென்ரியு என்று தலைப்பிட்டு வெளியிடாததின் தவறு.
ReplyDeleteநீங்கள் அந்தத் தவற்றைச் செய்யாமல் தைரியமாகச் சென்ரியு என்று குறிப்பிட்டு கவிதை படைத்தமைக்கு வாழ்த்துகள்...
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும் அப்போதுதான் உண்மையான ஹைக்கூக்கள் வெளிவரும். இல்லையேல் சென்ரியு கவிதைகள்தான் ஹைக்கூக்கள் என்ற தவறான மனநிலைக்குச் இலக்கிய வாசகர்களைச் சென்றடையும்.
இவ்வகையானக் கவிதைகளை எழுதுதம் தேவை ஏற்பட்டால் சென்ரியு என்று தலைப்பிட்டு எழுதுங்கள்... நிறைய எழுதுங்கள்...
நன்றியும் மகிழ்ச்சியும்
நன்றிகள் அண்ணா
Delete