தாகம் தீரு மெதுவா...!

குளுருக்கு அணைக்கணும் 
உயிருக்கு மிதமாய் 
கருவுக்கு பதமாய் 
பூவே சுகமாய் 
இல்லை நீ 
வெறும் பூகம்பமாய் 

வெயிலுக்கு அணைக்கணும் 
வியர்வைக்கு மிதமாய் 
பகலுக்கு பதமாய் 
மானே பார்வை சுகமாய் 
இல்லை நீ 
வெறும் பாதரசமாய் 

வானவில் இடுப்பழகி 
வாயாடி பேச்சழகி 
கத்திவேல் கண்ணழகி 
கார் மேக உடலழகி 

பொத்தி வச்ச 
ஆசையெல்லாம் ஓர் 
போர்வைக்குள்ள 
பூட்டி வச்சி 

அட்டை போல 
ஒட்டிக்கொண்டு என் 
ஆசையத்தான் தூண்டுரையே 
மேகம் போல வரவா 
என் தாகம் தீரு மெதுவா

3 comments:

  1. supper i like it so thanks

    ReplyDelete
  2. கவிதை எழுதும் மயில்
    கனா இசைத்து குயில் ஆனது ?
    நீங்க மயிலா ? இல்ல குயிலா?

    ReplyDelete
    Replies
    1. நான் மையிலுமில்லை இல்லை குயிலுமில்லை
      சராசரி பெண் நன்றி டா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145