சென்ரியுவாய்த் திருக்குறள் -10


குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

கலைஞர் உரை: 
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

ஹிஷாலியின் சென்ரியு:

இரு கரைகள் 
துடுப்பு 
கணவன் ...!

ஜென்மம் 
நீந்துகிறது 
கடவுளின் திருவடி...!

சாமி 
ஆசாமியகிவிடமுடியாது 
கடவுளை அன்றி ...!

2 comments:

  1. பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. மென் மேலும் சிறந்த படைப்புகளை வழங்கிட வேண்டிக்கொண்டு வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் .. நன்றிகளுடன் - அரசன்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145