பாவத்தின் சம்பளம் மரணமென்று !

விட்டுக் கொடுத்து
விட்டுக் கொடுத்து
வீதியில் நிற்கிறேன்
சிலர் விதியென்றார்கள்
சிலர் மதியென்றார்கள்
நானோ விதி மதி கலந்த
சதியென்றேன்
சிரித்தார்கள்
சிந்தித்து கொண்டே
சிலையாக நின்றேன்
கண் கடலானது
கால் மறுத்துப் போனது
இதயம் இடைவெளி விட்டு விட்டு 
லேசாக நிற்கத் தொடங்கியது
இனி இருக்க மாட்டோம் 
என நினைக்கையில்
நினைவுக்கு வந்தது
பாவத்தின் சம்பளம் மரணமென்று !

கவிச்சூரியன் இதழ் மே -19

சுதந்திரப் பூமி
அகதிகளாக திரியும் 
வண்ணத்துப்பூச்சிகள்

குருவியின் அலகு வரைகையில் 
பென்சில் முனையில்
கீச்கீச் சத்தம்

மரம் வெட்டும் போது
வியர்வையில் துளிர்க்கிறது
மனிதனின் பிம்பம்

கல்லறைத் தோட்டம் 
புதிதாகப் பூக்கும் 
மெழுகுவர்த்தி பூ

எப்படி குடை பிடித்தாலும்
மௌனமாய் உடைகிறது 
நீர்க் குமிழிகள்

முன் ஜென்ம பகையோ
பறவையின் அலகில்
தவளையின் சத்தம்

என்றோ வந்து போன மழை
பரண் மேல்
துருப்பிடித்த குடைக் கம்பி

பண முதலை ...!

காட்டு விலங்கை
வீட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

வீட்டு விலங்கை
தெரு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

தெரு விலங்கை
ரோட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

ரோட்டு விலங்கை
நகர விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

நகர விலங்கை
ஊர் விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

ஊர் விலங்கை
மாவட்ட விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

மாவட்ட விலங்கை
நாட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

நாட்டு விலங்கை
மாநில விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

மாநில விலங்கை
மத்திய விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

இறுதியில்
மத்திய விலங்கை
பண முதலை விழுங்கியாது

கொலுசு - மே 2019

பனியுறைந்த மரக்கிளைகளில்
சிக்கியிருக்கிறது
சிவப்பு நிற பலூன்

mhishavideo - 145