தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

தாலி ஏறாமல் இதயத்தில் 
தனிக் குடித்தனம்
தலையெழுத்தென்னவோ
முதிர் கன்னி

தூத்துக்குடி சோகம்சிறகறுந்த உயிர்கள் மத்தியில்
வேடனின் துப்பாக்கி சத்தம்
சிங்கத்தையே குறிபார்த்த
தோட்டாக்கள்
குருதியில் நனைந்த
உப்புக் காற்று
அய்யோ....
கொள்ளை ஆட்சிக்கு கொடிபிடித்தப் 
பிணம் திண்ணி கழுகுகளே
பணத்திற்கு விலை போனாயோ
அந்த 
உதிரத்தின் உழைப்பில் தான்
உன் சரிரம் வளர்ந்ததை
சற்றும் மறந்தாயோ
இதற்கு
மரணம் மட்டுமே தீர்வல்ல
மனிதாவி மானம் 
உண்டென்பதை மறைத்து
உப்பிட்ட மண்ணிற்கு
தப்பிட்டப் பெருமை எம்
தழிழகத்தில் உன்டென
உரைக்க செய்தாயோ
பதி மூன்று ஓட்டைக் கொன்று 
பதவியேறத் துடிக்கும் சொரி நாய்களே
இது மனுநீதிச் சோழன் வாழ்ந்த
மண்ணென்பதை நினைத்துப்பார் 
நீதி மறுபடியும் வெல்லும்

தூத்துக்குடி சோகம் !


Image may contain: 2 people, text

நெஞ்சு பொறுக்குதில்லையே 
வஞ்சி கொலை தீர்த்த இவ்
வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி
நெஞ்சு பொறுக்குதில்லையே
கஞ்சிக்கு வழியில்லை யென்று
களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் 
கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் 
கொடுமையைக் கண்டு 
நெஞ்சு பொறுக்குதில்லையே
நீதிக்கு வாயில்லை யென்று
நிலத்தடி நீரை விசமாக்கும் 
காப்பர் ஆலையை கண்டிக்க 
காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது 
நெஞ்சு பொறுக்குதில்லையே
மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில்
சங்கு முழங்கும் சாவை எண்ணி
நெஞ்சு பொறுக்குதில்லையே

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம் 
சொன்னதை விட
என்னிடம் சொன்னவை 
தான் அதிகம்
இப்படிக்கு
தழிழ் (கவிதை)

தன்முனைக் கவிதைகள் நானிலு - 56

எங்கோ ஒரு சிறுமி 
கற்பழிக்கப்படும் பொழுது 
கண்ணீர் வடிக்கிறது 
கள்ளிப்பால் !

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...